Top posting users this month
No user |
சிக்கன் கீ ரோஸ்ட்
Page 1 of 1
சிக்கன் கீ ரோஸ்ட்
எலும்பில்லாத சிக்கன் - அரை கிலோ
மேரினேட் செய்ய:
தயிர் - கால் கப்
எலுமிச்சை சாறு - அரை மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள்
வறுத்து அரைக்க:
மிளகாய் வற்றல் - 6
மிளகு - கால் தேக்கரண்டி
வெந்தயம் - ஒரு சிட்டிகை
தனியா - ஒரு மேசைக்கரண்டி
லவங்கம் - 2
புளி - ஒரு சிறு துண்டு (2 இன்ச் அளவு)
பூண்டு - 5 பற்கள்
சீரகம் - கால் தேக்கரண்டி
நெய் - 3 மேசைக்கரண்டி
சிக்கனை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கி, மேரினேட் செய்ய கொடுத்துள்ளவற்றைச் சேர்த்து பிரட்டி, 4 - 8 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து ஊறவிடவும். (எலும்புள்ள சிக்கனையும் பயன்படுத்தலாம். சிறு துண்டுகளாக நறுக்க வேண்டியது அவசியம்).
வெறும் கடாயில் வறுத்து அரைக்கக் கொடுத்துள்ளவற்றிலுள்ள மிளகாய் வற்றலை முதலில் வறுக்கவும்.
பிறகு அதே கடாயில் ஒரு தேக்கரண்டி நெய் விட்டு, புளி மற்றும் பூண்டு தவிர மீதமுள்ளவற்றைச் சேர்த்து சிறு தீயில் 2 - 3 நிமிடங்கள் வறுத்தெடுக்கவும்.
வறுத்தவற்றுடன் பூண்டு மற்றும் புளி சேர்த்து பொடித்துக் கொண்டு, தேவையான அளவு தண்ணீர் விட்டு நைசாக கெட்டியாக அரைத்து வைக்கவும். (அரைக்கும் போது அதிகம் தண்ணீர் சேர்க்கக்கூடாது. வாயில் பட்டால் நெய் போல் மசாலாவும் சாஃப்டாக இருக்க வேண்டும். அந்த அளவிற்கு மசாலாவை நைசாக அரைக்க வேண்டும்).
பாத்திரத்தில் ஒரு மேசைக்கரண்டி நெய் விட்டு, அதில் ஊறிய சிக்கன் துண்டுகளைச் சேர்த்துப் பிரட்டி மூடி வேகவிட்டு எடுக்கவும். (தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை. சிக்கனிலிருந்து வரும் தண்ணீரே போதுமானது. வெந்ததும் அதிலிருக்கும் நீருடன் சேர்த்து எடுத்து வைக்கவும்).
அதே பாத்திரத்தில் மீதமுள்ள நெய்யை விட்டு, அரைத்த மிளகாய் மசாலா மற்றும் உப்புச் சேர்த்து அடுப்பை சிறு தீயில் வைத்து நெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.
நெய் பிரிந்து, மசாலா திரண்டு வரும் போது, சிக்கனை அதிலுள்ள நீருடன் சேர்க்கவும். (உப்பு சரி பார்த்துக் கொள்ளவும்). மசாலா முழுவதும் கெட்டியாகி சிக்கனுடன் சேர்ந்து வரும் வரை மிதமான தீயில் வைத்து பிரட்டவும். (மசாலாவுடன் சிக்கன் சேர்ந்து ஊறினால் சுவை நன்றாக இருக்கும்).
மசாலா சிக்கனுடன் சேர்ந்து வந்ததும் இறக்கவும். சூடான மங்களூர் ஸ்பெஷல் சிக்கன் கீ ரோஸ்ட் தயார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum