Top posting users this month
No user |
மறைந்த முன்னாள் வட மாகாண கல்வி பணிப்பாளருக்கு, கிளி.மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம், சிறீதரன் எம்பி இரங்கல்
Page 1 of 1

வடக்கு, கிழக்கு மாகாணத்தின் முன்னாள் கல்வி பணிப்பாளரும் கிளிநொச்சி வலயத்தின் முன்னாள் கல்வி பணிப்பாளருமான அமரர் சிவசம்பு கமலநாதன் அவர்களுக்கு கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் இரங்கலையும் வணக்கத்தையும் தெரிவித்துள்ளது.
பழைய மாணவர் சங்கம் சார்பாக அதன் செயலாளர் பொன்.காந்தன் விடுத்துள்ள அறிக்கையில்,
நெருக்கடியான காலங்களில் எமது சமூகத்தின் கல்வி வளர்ச்சிக்காக பணியாற்றிய ஒரு உயர்ந்த மனிதர்தான் திரு.கமலநாதன் அவர்கள்.கிளிநொச்சி வலயத்தின் கல்வி பணிப்பாளராக அவர் பதவி வகித்த காலம் போரும் வாழ்வுமாக எமது மண் இருந்த காலம்.
போக்குவரத்து மற்றும் இன்னும் பிற அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள மக்கள் பலத்த பிரயத்தனங்களை மேற்கொண்ட காலம்.
கிளிநொச்சி வலயக்கல்விப்பணிமனை தற்காலிகமாக எமது பாடசாலையின் ஒரு பகுதியில் இயங்கிய வேளையில் அமரர் கமலநாதன் அவர்கள் தன் சொந்த ஊரான யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சிக்கு வந்து இங்கேயே மாதக்கணக்காக தங்கி நின்று எமது மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்திருந்தார்.
அவரது நேரடிப்பார்வை பாடசாலைகளின் மீது விழும்படியாக நிர்வாகத்தை அவர் கொண்டு சென்றிருந்தார்.எமது கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய பாடசாலை வளாகத்திலேயே அவர் இருந்த காரணத்தால் மாணவர்களை நெருங்கி கருத்துக்களை அவர் கேட்டதுடன் மாணவர்களுக்கும் அவர் நன்கு பரீட்சயமான நெருக்கமான கல்விப்பணிப்பாளராக இருந்தார்.
கிளிநொச்சி மாவட்டத்தின் கல்வி வளர்ச்சியில் அவரின் பணியை எமது மாவட்டம் என்றும் மறக்காது, நன்றி கூறும்.இன்று அவரது இறுதிப்பயணம் நடைபெறும் இவ்வேளையில் நாம் அவருக்கு எமது உயர்ந்த வணக்கத்தை தெரிவித்துக்கொள்கின்றோம்.
மறைந்த முன்னாள் கல்விப்பணிப்பாளர் கமலநாதனுக்கு பா.உறுப்பினர் சி.சிறீதரன் வணக்கம்
மறைந்த முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளரும்,கிளிநொச்சி வலயத்தின் முன்னாள் கல்விப்பணிப்பாளருமான சி.கமலநாதன் அவர்களுக்கு இன்று யாழ்.மாவட்ட பா.உறுப்பினர் சி.சிறீதரன் மற்றும் கிளிநொச்சி வலயக்கல்விப்பணிப்பாளர் உள்ளிட்ட கல்வி சமூகத்தினர் இறுதி வணக்கத்தை செலுத்தியுள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum