Top posting users this month
No user |
அவன் கார்ட் ஆவணங்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவு
Page 1 of 1

அவன் கார்ட் நிறுவனத்தின் மூல ஆவணங்களை பேணிப் பாதுகாத்து வைத்திருக்குமாறு, அந்த நிறுவனத்திற்கு காலி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காலி கடற்பரப்பில் மிதக்கும் ஆயுதக் களஞ்சியமொன்றை அவன்கார்ட் நிறுவனம் பேணி வந்தது.
இந்த நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட 2012ம் ஆண்டு முதல் நிறுவனத்தின் சகல கணக்கு விபரங்கள் உள்ளிட்ட சகல மூல ஆவணங்களையும் பாதுகாப்பாக வைத்திருக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
காலி பிரதான நீதவான் நிலுபுலி லங்காபுர இந்த உத்தரவினை நேற்று பிறப்பித்துள்ளார்.
நிறுவனம் தொடர்பில் விசாரணை நடத்தி வரும் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் விடுத்த கோரிக்கைக்கு அமையää ஆவணங்களை பாதுகாக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கப்பல் பழுதடைந்த நிலையில் இருப்பதனால் அதனை விடுவிக்குமாறு நீதிதிமன்றில் கோரப்பட்டது.
இது குறித்து சட்ட மாஅதிபரின் ஆலோசனையை பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு நீதவான், புலனாய்வுப் பிரிவினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அவன்கார்ட் நிறுவனத்தினால் காலி கடற்பரப்பில் பேணப்பட்டு வந்த மிதக்கும் ஆயுதக் களஞ்சியத்தின் ஊடாக சட்டவிரோத ஆயுதக் கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றதாகவும், சர்வதேச தீவிரவாதிகளுக்கு ஆயுதங்கள் விற்பனை செய்யப்பட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum