Top posting users this month
No user |
பாலபட்டபெந்தி தமது பதவியை விற்பனை செய்துவிட்டார்!- தில்ருக்சி
Page 1 of 1

லஞ்ச ஊழல் எதிர்ப்பு ஆணைக்குழுவின் தலைவர் ஜெகத் பாலபட்டபெந்தி, தமது பதவியை விற்பனை செய்து விட்டதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் தில்ருக்சி டயஸ் விக்கிரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை விசாரணைக்கு அழைத்தமைக்கு எதிராக நாடாளுமன்ற விசாரணைக்கு வருமாறு சபாநாயகர் அழைத்திருந்தார்.
இதன்போது தாம் வெளிநாட்டுக்கு சென்றிருந்த நிலையில் ஆணைக்குழுவின் தலைவர் நாடாளுமன்றத்துக்கு பிரசன்னமாகியிருந்தார்.
இது ஏற்றுக் கொள்ள முடியாதது என்று தில்ருக்சி குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் சட்டப்படி அரச பணியாளர் ஒருவரை விசாரணை செய்ய சபாநாயகருக்கு அதிகாரம் இல்லை.
எனவே தாம் இல்லாத நேரத்தில் சபாநாயகரின் உத்தரவை ஏற்று நாடாளுமன்ற விசாரணைக்கு பிரசன்னமானதன் அடிப்படையில் லஞ்ச ஊழல்களுக்கு எதிரான ஆணைக்குழுவின் தலைவர், தமது பதவியை விற்பனை செய்து விட்டதாக தில்ருக்சி குற்றம் சுமத்தினார்.
தமது ஆணைக்குழு சுயாதீன ஆணைக்குழு என்ற வகையில் அதன் சுயாதீன தன்மை பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை மஹிந்த ராஜபக்சவை மீண்டும் விசாரணைக்கு அழைக்கப் போவதாக தில்ருக்சி அண்மையில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum