Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


தாடி வைத்ததால் வேலையை இழந்த இஸ்லாமிய ஊழியர்: வெடிக்கும் சர்ச்சை

Go down

தாடி வைத்ததால் வேலையை இழந்த இஸ்லாமிய ஊழியர்: வெடிக்கும் சர்ச்சை Empty தாடி வைத்ததால் வேலையை இழந்த இஸ்லாமிய ஊழியர்: வெடிக்கும் சர்ச்சை

Post by oviya Fri Jun 05, 2015 3:27 pm

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இஸ்லாமிய இளைஞர் ஒருவர் தாடி வைத்திருந்த காரணத்திற்காக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கொல்கத்தாவில் முகமது இஸ்மாயில் என்பவர் கடந்த 6 ஆண்டுகளாக அதுனிக் குரூப் ஆப் இன்டஸ்ட்ரீஸின் சுரங்கப் பிரிவின் பொது மேலாளராக பணியாற்றி வந்துள்ளார்.

அவர் கடந்த ஆண்டு ஹஜ் புனித யாத்திரை செய்துவிட்டு மே மாதம் தாடியுடன் நாடு திரும்பியுள்ளார்.

இதனால் நிறுவனத்தில் கடந்த மார்ச் மாதம் வரை அவரது சம்பளம் பாதியாக குறைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இஸ்மாயில் இது குறித்து நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் மனோஜ் அகர்வாலை சந்தித்து பேச முடிவு செய்துள்ளார்.

மனோஜை சந்தித்து பிடித்து வைக்கப்பட்ட தனது மீதி சம்பளத்தை அளிக்குமாறு கேட்டபோது அவரை பணிநீக்கம் செய்துள்ளனர்.

இது குறித்து இஸ்மாயில் கூறுகையில், நான் ஹஜ்ஜில் இருந்து திரும்பி வந்தபோது தாடி வைத்திருந்தேன்.

அதற்கு நிறுவனத்தின் எம்.டி.யோ நான் அவரை பயமுறுத்த முயன்றதாகவும், என்னை தீவிரவாதி என்றும் தெரிவித்துள்ளார்.

என் சொந்த மண்ணில் என்னை தீவிரவாதி என்று அழைப்பதை கேட்டு வருத்தமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

தாடியால் தனது வேலை பறிபோனது குறித்து மனித உரிமைகள் ஆணையம், சிறுபான்மையினர் ஆணையம், முதல்வர் அலுவலகத்தை இஸ்மாயில் அணுகியும் எந்த பலனும் இல்லை.

மேலும் மனோஜ் அகர்வாலுக்கு எதிராக பொலிசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

தற்போது இஸ்மாயில் நீதி கேட்டு கொல்கத்தா உயர் நீதிமன்றத்தை அணுக உள்ளார்.

இந்த செய்தி அறிந்ததும் அந்நிறுவனம் இஸ்மாயிலின் மீதி சம்பளத்தை அளிப்பதாக எஸ்.எம்.எஸ். அனுப்பியுள்ளது. ஆனால் அவர் நீதியை மட்டுமே எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum