Top posting users this month
No user |
நாட்குறிப்புகளுக்காக 150 லட்சத்தை செலவிட்ட விமல் வீரவன்ஸவின் அமைச்சு
Page 1 of 1

நாட்குறிப்பு மற்றும் நாட்காட்டிகளை அச்சிட நிர்மாணம், பொறியியல் சேவை, வீடமைப்பு மற்றும் பொதுவசதிகள் அமைச்சினால், சுமார் ஒன்றரை கோடி ரூபா செலவிடப்பட்டமை குறித்து உடனயாக விசாரணைகளை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ், கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவுக்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அமைச்சின் கீழ் இருந்த 9 நிறுவனங்களுக்காக 2015 ஆம் ஆண்டுக்கான நாட்குறிப்பு மற்றும் நாட்காட்டிகளை அச்சிட இந்த பணம் பயன்படுத்தப்பட்டதா என்பதை அறிய விசாரணைகளை நடத்தி வருவதாக நிதி மோசடி விசாரணைப் பிரிவு வழங்கிய அறிப்பை கவனத்தில் கொண்டு நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
ஓஷன் விவ் டெவலப்மெண்ட் தனியார் நிறுவனத்தின் தலைவர் பூர்ண சந்தன சில்வா செய்துள்ள முறைப்பாட்டுக்கு அமைய பணச் சலவை சட்டத்தின் கீழ் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த விசாரணைகளில் முடிவுகளை எதிர்வரும் செப்டம்பர் 5 ஆம் திகதி நீதிமன்றத்திற்கு அறிய தருமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த அரசாங்கத்தில் நிர்மாணம்,பொறியியல் சேவை, வீடமைப்பு மற்றும் பொதுவசதிகள் அமைச்சராக விமல் வீரவன்ஸ பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum