Top posting users this month
No user |
கிழக்கில் வீடுகள் இல்லாதவர்களுக்கு வீடுகள் பெற்றுக்கொடுக்க முயற்சிப்பேன்: யோகேஸ்வரன்
Page 1 of 1

எமது பிரதேசங்களில் உண்மையில் வீடு இல்லாமல் இருக்கின்றவர்கள், அவர்களின் குடும்ப நிலை என்ன என்ற பட்டியலை என்னிடம் சமர்ப்பித்தால்,இயன்றவரை வீடுகளை பெற்றுக் கொடுக்க முயற்சிப்பேன் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு ஆரையம்பதி காமாட்சி நகர் கிராமத்தில் நூறு நாள் வேலைத் திட்டத்தில் வடிகானுக்கு கல் வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது,அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோ.கருணாகரம், அரச உத்தியோகஸ்த்தர்கள், கிராம பிரதிநிதிகள் மற்றும் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
நாங்கள் நீண்டகாலமாக எதிர்க்கட்சியில் இருப்பவர்கள், இப்பொழுதும் மத்திய அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுத்தாலும் எதிர்க்கட்சியில் தான் இருக்கின்றோம்.
ஆனால் கிழக்கு மாகாண சபையைப் பொருத்தமட்டில் இரண்டு அமைச்சு பதவிகளை பெற்றிருக்கின்றோம். ஒன்று கல்வி கலாசார விளையாட்டு, மீள்குடியேற்ற அமைச்சு மற்றையது விவசாய, நீர்ப்பாசன, மீன்பிடி, கூட்டுறவு, உணவு பாதுகாப்பு, கால்நடை, வணிபம் அமைச்சு ,இவ்விரண்டு அமைச்சர்களும் எமது மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனவே எமது மக்கள் அந்த அமைச்சர்களைச் சந்தித்து உங்கள் சேவைகளையும்,தேவைகளையும் கதைத்து பெற்றுக் கொள்ள வேண்டும்.
எங்களிடம் இருந்து எவற்றைப் பெறமுடியுமோ அதனை நீங்கள் பெற்றுக் கொள்ள வேண்டும். பின்னர் நாம் எதுவும் செய்யவில்லை என்று கூறக்கூடாது.
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாங்கள் பலர் மத்திய அரசாங்கத்தில் இருக்கின்றோம் பல கோரிக்கைகளின் நிமித்தம் நியாயமான தீர்வுகளை எமது மக்களுக்காகப் பெறுவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கின்றோம்.
நூறு நாட்களுக்கு அமைச்சர் பதவிகளை பெற்று எமது மக்களை ஏமாற்றுவதற்கு நாங்கள் தயாராக இல்லை. ஆனால் மாகாண சபையில் அமைச்சுக்களைப் பெறாமல் விட்டால் மாகாணத்தில் பெறவேண்டிய சலுகைகளை, இந்த மாகாணத்தில் விகிதாசார ரீதியாக கூடிய நிலையில் இருக்கும் நாம் பெறாமல் அதற்கு குறைந்த விதத்தில் இருப்பவர்கள் பெற்றுக் கொள்வார்கள்.
இதனால் தான் அமைச்சுப் பொறுப்புகளைப் பெற்றிருக்கின்றோம்.அதன் மூலம் கூடுதலான பலன்களைப் பெற்று எமது மக்களின் வாழ்வாதாரம் கட்டியெழுப்பப்பட வேண்டும்.
தற்போது நாடாளுமன்றம் எப்போது கலையும் என்று கூற முடியாத சூழல் இருக்கின்றது. எமது பிரதேசங்களில் எத்தனை பேருக்கு வீடு இல்லாமல் இருக்கின்றது.
யார் யாருக்கு உண்மையில் வீடு இல்லை. அவர்கள் குடும்பத்தில் எத்தனை பேர் இருக்கின்றார்கள் அவர்களின் குடும்ப நிலை என்ன என்ற விபரங்களை என்னிடம் சமர்ப்பிக்கவும். முன்னர் வீட்டுத் திட்டங்கள் பெற்றவர்கள் அல்லாமல் பெறாதவர்கள் என்னிடம் பட்டியலைச் சமர்ப்பிக்கலாம். இயன்றவரை வீட்டு உதவிகளை பெற்றுக் கொடுக்க முயற்சிப்பேன்.
இந்த நூறு நாள் வேலைத்திட்டம் எமது பகுதிகளுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கின்றது. இதில் எமது மக்களின் முயற்சி அதிகம் இருக்க வேண்டும். இப்பகுதி மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் பற்றி நான் நன்கு அறிவேன்.
இதனால் தான் நாங்கள் கடந்த காலங்களில் சில வேலைத் திட்டங்களை இப்பகுதிகளில் ஆரம்பித்து வருகின்றோம். எமது மக்களின் தேவை குறித்து எப்போதும் நாம் கரிசனையாக இருப்போம். இந்த நாட்டில் எந்த அரசாங்கம் வந்தாலும் செய்யப்படுகின்ற வேலை நடந்து கொண்டே இருக்கும்.
முன்பு அரசாங்கத்தில் இருந்த சில அரசியல்வாதிகள் பத்து இலட்சம் ரூபாவை ஏதோ அவர்களே கொண்டு வந்தது போன்று கூறி ஏமாற்றி சென்றுள்ளனர். ஆனால் பல இடங்களில் இந்நிதியில் ஒரு இலட்சம் ரூபாய், ஐம்பதாயிரம் ரூபாய் என இலஞ்சம் பெற்றுள்ளனர்.
அவர்களின் நண்பர்களுக்கே இவ்வேலைகளை குத்தகைக்கு கொடுத்துள்ளனர். இது தான் மக்களுக்கு கிடைத்த பலாபலன். இதனால் மக்கள் தான் பாதிக்கப்பட்டார்கள். இத்திட்டத்தின் செயற்பாடு தரமற்றதாக மாறியது.
இத்தனையையும் செய்து விட்டு அவர்கள் அத்தனை பேரின் போட்டோவையும் போட்டு விளம்பர பலகை அடித்து விடுவார்கள். ஆனால் தற்போது அவ்வாறான நிலை இல்லை நாம் பல இடங்களில் சொல்லி இருக்கின்றோம் எந்தவொரு அரசியல்வாதிக்கும் இலஞ்சம் கொடுக்கக் கூடாது.
எந்த அரச அதிகாரிக்கும் இலட்சம் கொடுக்கக் கூடாது மக்களின் பங்களிப்போடு மொத்தம் பன்னிரண்டரை இலட்சத்திற்கும் வேலை இடம்பெற வேண்டும். ஆரம்பிக்கப்படுகின்ற வேலைத்திட்டம் விரைவாக செய்து முடிக்கப்பட வேண்டும். இதற்காக என்னாலான சகல உதவிகளையும் மேற்கொள்வதோடு பிரதேச சபைகளின் மூலமும் நாம் பல வேலைத் திட்டங்களை நடாத்தலாம் என்று தெரிவித்தார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum