Top posting users this month
No user |
Similar topics
யாழிற்கு விசேட பொலிஸ் குழுவொன்று விஜயம்! மேலும் பலர் கைது செய்யப்படலாம்?
Page 1 of 1

யாழ். நீதிமன்றத்தின் மீதான தாக்குதல் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக ஆராய கொழும்பில் இருந்து விசேட பொலிஸ் குழுவொன்று யாழ்ப்பாணத்திற்குச் சென்றுள்ளது.
கடந்த 19, 20ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பேராட்டங்களைத் தொடர்ந்து, நீதிமன்றத்தின் மீது இடம்பெற்ற தாக்குதல் மற்றும் வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை,
தமக்கு கிடைத்துள்ள வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்களை வைத்து அடையாளம் கண்டு விசாரணைக்கு உதவுவதற்கே கொழும்பில் இருந்து விசேட பொலிஸ் குழுவொன்று யாழ் விரைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு பொலிஸ் தலைமையக சி.சி.ரீ.வி. கமெரா பிரிவின் விசேட நிபுணர் குழுவே நேற்றுத் திங்கட்கிழமை யாழ்ப்பாணம் வந்துள்ளதாக பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொலிஸாருக்கு கிடைக்பெற்ற வீடியோ பதிவுகள் மற்றும் புகைப்படங்கள் மூலம் வன்முறைகள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்க பொலிஸ்மா அதிபர் என்.கே.இலங்ககோன் குற்றப்புலனாய்வு பரிவுக்கு உத்தரவிட்டிருந்தார்.
இதனையடுத்தே இந்தக் குழு யாழ்ப்பாணம் விரைந்துள்ளது. இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் ஈடுபட்ட களோபரங்களுடன் தொடர்புடைய மேலும் பலர் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
யாழ்.நீதிமன்றம் மீதான தாக்குதல்! கைதானவர்கள் 143 ஆக அதிகரிப்பு
யாழ்.நீதிமன்றக் கட்டடத் தொகுதி தாக்குதல் சம்பவம் மற்றும் நகரப் பகுதிகளில் நடைபெற்ற ஏனைய வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் என்னும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களுடைய தொகை 143 ஆக அதிகரித்துள்ளது.
மேற்படி வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்ட வேறு சிலருடைய புகைப்படங்களும் பொலிஸாரிடம் சிக்கியுள்ளது. அவர்களை தேடியும் பொலிஸார் வலைவிரித்துள்ளனர்.
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலையினைக் கண்டித்து ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் நாளடைவில் விரிவடைந்து யாழ்.நகரிலும் நடைபெற்றிருந்தது.
இந்நிலையில் கடந்த 20 திகதி இப்போராட்டமானது திசைமாற்றப்பட்டு வன்முறைச் சம்பவங்கள் நடைபெறுவதற்கு ஏதுவாக அமைந்திருந்தது.
அன்றைய தினம் யாழ்.நீதிமன்ற கட்டத் தொகுதியின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதுடன், யாழ்.நகரப் பகுதிகளிலும் பல்வேறு வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியிருந்தன.
பொதுச் சொத்துக்கள் பல சேதமாக்கப்பட்டிருந்தது.இச்சம்பவம் தொடர்பாக 130 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இருப்பினும் குறித்த வன்முறைச் சம்பவங்களின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களை மற்றும் கண்காணிப்புக் கமெராக்களில் பதிவான ஆதாரங்களைக் கொண்டு குற்றவாளிகளை தேடி பொலிஸார் வலை விரித்துள்ளனர்.
இத்துடன் நல்லூர் பிரதேச செலகம் மீது தாக்குதல் நடத்தத்தியவர்களையும் பொலிஸார் தேடி வருகின்றனர்.
இவ்வாறான வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டவர்களுடைய புகைப்படங்கள் மற்றும் வீடீயோக்கள் பொலிஸாரிடம் சிக்கியுள்ள போதும் அவர்களில் பலர் தலைமறைவாகியுள்ளனர்.
எனினும் மேற்படிச் சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்டு வரும் புலனாய்வு ரீதியான விசாரணைகளின் படி ஏற்கனவே கைது செய்யப்பட்ட 130 நபர்களுக்கு மேலாக 13 பேர் மேலதிகமாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ச்சியான விசாரணைகள் நடைபெற்று வருகின்றது என்று பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» யாழிற்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
» பளையில் காவற்துறையினர் மீதான தாக்குதல்: மேலும் இருவர் கைது
» எதிர்வரும் 13 நாட்களில் மோசடிகளுடன் தொடர்புடைய பலர் கைது செய்யப்படுவர்! கொழும்பு ஊடகம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum