Top posting users this month
No user |
ஆதரவற்ற அகதிகளாக செத்து மடியும் ரொஹிங்யோ மக்கள்: கைகட்டி வேடிக்கை பார்க்கும் ஐ.நா
Page 1 of 1

மியான்மர் நாட்டில் பிறந்து வளர்ந்த ரொஹிங்யோ இன மக்களை அந்நாட்டு பெளத்தமத அரசாங்கம் குடியுரிமை வழங்காமல் நாட்டை விட்டு துரத்தும் அவலத்தை பார்த்துக்கொண்டு ஐ.நா சபை மெளனம் காத்து வருவது சர்வதேச அளவில் எதிர்ப்புகளை கிளப்பியுள்ளது.
இந்திய தேசத்தின் பூர்வீக குடிகளான ரொஹிங்கோ முஸ்லீம்கள், 18ம் நூற்றாண்டில் அரக்கானை குடியரசாக கொண்டு மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்தனர்.
ஆனால், 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அரக்கானை பலவந்தமாக தன்னோடு இணைத்துக்கொண்டது மியான்மரின் பெளத்தமத அரசாங்கம்.
இதன் பின்னர், பெளத்தமத தீவிரவாதிகளின் இனவெறி தாக்குதலால் ஒவ்வொரு நாளும் மரண வேதனையை ரொஹிங்யோ இஸ்லாமிய மக்கள் அனுபவித்து வருகின்றனர்.
தாய் பூமியில் பிறந்து வளர்ந்த இந்த மக்களுக்கு குடியுரிமை வழங்க மறுக்கும் அரசாங்கத்தின் கொடுங்கோல் ஆட்சியை என்னவென்று சொல்வது?
பெளத்தமத தீவிரவாதிகளும் மியான்மார் பொலிசார் மற்றும் இராணுவத்தினரும் ரொஹிங்யோ இஸ்லாமிய மக்கள் மீதான இனவெறி தாக்குதலை சர்வதேச நாடுகளும் வேடிக்கை பார்ப்பது கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகிறது.
இலங்கையில் பெளத்தமத சிங்கள இராணுவத்தினரால் லட்சக்கணக்கான உறவுகளை இழந்த ஈழ தேசத்து தமிழர்கள் ரொஹிங்யோ இஸ்லாமியர்கள் மீதான இனவெறி தாக்குதலை வன்மையாக கண்டித்துள்ளனர்.
ஆதரவற்ற மக்கள் மீது நடத்தப்படும் இந்த தாக்குதலுக்கு எதிராக குரல் கொடுக்காமல் அமைதியாக வேடிக்கை பார்ப்பது ஏன் என ஐ.நா மன்றத்திற்கு கேள்வி எழுப்பியுள்ளனர்.
தாய் மண்ணை விட்டு தங்களுடைய குழந்தைகளை பாதுகாக்க பசியும் பட்டினியுமாக ஆயிரக்கணக்கான ரொஹிங்யோ மக்கள் ஆபத்து நிறைந்த கடல் பயணங்களில் சென்று செத்து மடிவதை வேடிக்கை பார்க்காமல் ஐ.நா மன்றம் மியான்மார் அரசிடம் பேச்சுவார்த்த நடத்த வேண்டும்.
திக்கற்ற நிலையில் கடலில் சுற்றி திரியும் மக்களை பாதுகாக்க ஐ.நா அதிகாரிகள் விரைந்து செயல்பட வேண்டும் என்றும் ஈழ தேசத்து தமிழர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரொஹிங்யோ மக்களுக்கு இழைக்கப்படும் துரோகங்களை குறித்து தினமும் பத்திரிகை செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. அவ்வாறு வெளியான செய்தியில் சமீபத்திய ஒரு அதிர்ச்சி தகவல் வந்துள்ளது.
அதாவது, ரொஹிங்யோ இஸ்லாமியர்கள் மீதான இனவெறி தாக்குதலுக்கு மிக முக்கிய காரணமாக கருதப்படுபவர் விராத் என்ற பெயருடைய பெளத்த மத துறவி.
இலங்கையில் பெளத்த கொள்கைகளில் மூழ்கியுள்ள பொதுபலசேனா என்ற அமைப்பு கடந்த 2014ம் ஆண்டு ஏற்பாடு செய்திருந்த ஒரு கூட்டத்தில் விராத்தும் கலந்து கொண்டுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
இதன் மூலம், பொதுபல சேனா அமைப்பும் பெளத்த மதத்தை சார்ந்திராத மக்கள் மீது இனவெறி தாக்குதல் நடத்தும் கொள்கையையும் சித்தாந்தத்தையும் கொண்டுள்ளதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
இலங்கையில் தனி ஈழம் அமைக்கும் உரிமை போராட்டத்தில் லட்சக்கணக்கான தமிழர்கள் தங்களின் இரத்தத்தை சிந்தியுள்ளனர். ஆறென பெருத்த ஓடிய இவர்களின் இரத்தத்திலேயே அவர்களின் சுதந்திர போராட்டத்தை முடக்கியது அங்குள்ள பெளத்த சிங்கள இராணுவம்.
இலங்கையில் பெளத்த சிங்கள இராணுவத்தினரின் கற்பழிப்பு, கொலை, ஆட்கடத்தல் உள்ளிட்ட கொடுமைகளுக்கு ஈழத்தமிழர்கள் உள்ளானது போல தற்போது ரொஹிங்யோ இஸ்லாமிய மக்கள் மியான்மர் பெளத்த தீவிரவாதிகளின் அடக்குமுறைகளால் நாள்தோறும் பலியாகி வருகின்றனர்.
அவர்களின் வாழ்க்கையில் அமைதி நிலைத்து நிற்க ஈழ தமிழர்களாகிய நாங்கள் எப்போதும் துணை நிற்போம்.
ஈழத் தமிழர்கள் மீது பெளத்த சிங்களவர்கள் நடத்திய கொலை வெறி தாக்குதலை ஐ.நா மன்றமும், சர்வதே மனித உரிமைகள் அமைப்புகளும் அனுமதி அளித்து வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்ததைபோல் தற்போது ரொஹிங்யோ இஸ்லாமியர்கள் மீதான இனவெறி தாக்குதலையும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கின்றன.
ஐ.நா மன்றம் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் தொடர்ந்து மெளனம் காத்து வருவதால், அவற்றின் மீது அப்பாவி மக்களுக்கு இருந்த நம்பிக்கை தற்போது தொலைந்துவிட்டது.
மியான்மார் அரசாங்கத்தால் நாடுகடத்தப்பட்ட மருத்துவர் Maung Zarn என்பவர் ஈழத்தமிழர்களுக்கும் ரொஹிங்யோ இஸ்லாமிய மக்களுக்கும் ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்.
ஜெனிவா மற்றும் நோர்வே நாடுகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டங்களில் ஈழத்தமிழர்களுக்கும் ரொஹிங்யோ மக்களுக்கும் ஆதரவாக பேசியுள்ளார்.
அதேபோல், நோர்வேயில் உள்ள ஈழத்தமிழர்கள் கவுன்சிலும் ரொஹிங்யோ மக்களுக்கு குரல் எழுப்பியதுடன் ஆதரவும் திரட்டி வருகின்றனர்.
ரொஹிங்யோ மக்களுக்கு ஆதரவாக ஈழத்தமிழர்கள் உணர்வு பூர்வமாக கலந்துக்கொள்வதை பார்க்கும்போது அடக்குமுறைகளால் பாதிக்கப்பட்டவர்களை ஒரு அணியில் திரட்டி அப்பாவி மக்களுக்கு ஆதரவாக செயல்படும் உயரிய எண்ணத்தையே காட்டுகிறது.
இவ்வாறு அனைத்துலக ஈழத்தமிழர் அவை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum