Top posting users this month
No user |
பாதிக்கப்பட்ட மக்கள் மீள் குடியமர முன் எதிர்நோக்கும் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்: தண்டாயுதபாணி
Page 1 of 1

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் வீடு திரும்பும் போது எதிர்கொள்ளவிருக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை முன் கூட்டியே கவனத்திற்கெடுத்து அதற்குரிய ஏற்பாடுகளை அரசு மற்றும் தன்னார்வ நிறுவனங்களை மேற்கொள்ளுமாறு கிழக்கு மாகாண சபையின் எதிர் கட்சி தலைவர் சி. தண்டாயுதபாணி வேண்டுகோள் விடுக்கின்றார்.
தொடர்ச்சியாக கிழக்கு மாகாணத்தில் பெய்து வரும் மழை காரணமாக தமது வாழ்விடங்களை இழந்து அகதிகளாக பொது இடங்களில் தங்கியுள்ள மூதூர் மற்றும் வெருகல் பிரதேசங்களில் உள்ள மக்களை பார்வையிட்டு அவர்களுடைய தேவைகள் தோடர்பாக விசாரிக்க சென்ற கிழக்கு மாகாணசபையின் எதிர் கட்சி தலைவர் உற்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், இலங்கை தமிழரசு கட்சியின் பிரதிநிதிகள் ஆகியோர் அடங்கிய குழுவொன்று சென்று பார்வையிட்டதன் அடிப்படையில் எதிர் கட்சி தலைவர் சி.தண்டாயுதபாணி இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
வெள்ளம் வழிந்தோடிய பின்னர் பாதிக்கப்பட்ட மக்கள் தமது வீடுகளுக்கு திரும்பும்போது பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
உணவு கழிப்பறை உட்பட்ட சுகாதார தேவைகள், வெள்ளநீர் உட்புகுந்தமையால் வீடுகளில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புக்களைத் திருத்தம் செய்தல், பிள்ளைகளின் புத்தகங்கள் உட்பட்ட கல்வி உபகரணங்களின் தேவை, போன்ற பிரச்சினைகளை எதிர் கொள்வார்கள்.
இப்பிரச்சனைகளை பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்கொள்ளத் தேவையான ஏற்பாடுகளை உரியவர்கள் மேற்கொள்ள வேண்டும்.
பொது இடங்களில் தங்கியுள்ளவர்கள மக்களுக்கு அவர்களுடைய பிரதேச செயலக பிரிவுகளினால் சமைத்த உணவு வழங்கப்பட்டு வருகின்றது.
இருப்பினும் வெள்ளநீர் வடிந்தோடிய பின் மக்கள் தமது வீடுகளுக்கு செல்லும் போது பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பார்கள் எனவும் இதற்கான முன்னாயத்தங்களை அரசு மற்றும் தன்னார்வ நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறினார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum