Top posting users this month
No user |
வவுனியாவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு வடக்கு சுகாதார அமைச்சர் நேரில் சென்று ஆய்வு
Page 1 of 1

வவுனியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில்சென்று ஆய்வுசெய்த சுகாதார, சுதேச வைத்தியத்துறை சமூகசேவைகள், நன்னடத்தை, புனர்வாழ்வு, மகளிர் விவகார அமைச்சர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசர நிவாரணப்பொருட்களை வழங்கி வைத்தார்.
செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவே வவுனியா மாவட்டத்தில் தற்போதைய மழையினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இப்பிரதேசத்தில் 12 நலன்புரி நியைங்களில் மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதைவிட வவுனியா பிரதேச செயலக பிரிவில் 06 நலன்புரி நிலையங்களிலும் மொத்தமாக மாவட்டத்தில் 20 நலன்புரிநிலையங்களில் மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பொதுக்கட்டிடங்களிலும் தற்காலிக கூடாரங்களிலும் வாழ்ந்து வருகின்றார்கள்.
இந்த நிலையில் நேற்று இந்தப் பகுதிக்கு விஜயம் செய்த அமைச்சர் உடனடியாக செயற்படும் வகையில் நடமாடும் வைத்திய சேவையை இடம் பெயர்ந்தவர்கள் தங்கி வாழும் தற்காலிக முகாம்களில் நடாத்துவதற்கு சுகாதார திணைக்களத்தின் அதிகாரிகளை பணித்ததோடு அவர்களுக்கான அவசர நிவாரண சுகாதார பொருட்கள் மற்றும் பால்மா போன்றவற்றை வழங்கி வைத்தார்.
இதன்போது வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதனும் கலந்து கொண்டார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum