Top posting users this month
No user |
உளுந்து-வெல்ல வடை
Page 1 of 1
உளுந்து-வெல்ல வடை
உளுந்து - ஒரு கப்
வெல்லம் - அரை கப்
உப்பு - ஒரு சிட்டிகை
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உளுந்தை ஒரு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ளவும்.
உளுந்தை தண்ணீர் வடித்து, வெல்லம் மற்றும் உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்து மைய அரைத்துக் கொள்ளவும். மாவு கெட்டியாக இருக்க வேண்டும்.
ஒரு கடாயில் பொரிக்க தேவையான எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் மாவை வடைகளாக தட்டி போடவும். தண்ணீர் தொட்டு தட்டினால் நன்றாக தட்ட வரும். நடுவில் ஓட்டை செய்து தட்டினால், எண்ணெய் அதிகம் இழுக்காது. எல்லாப் பக்கமும் ஒரே மாதிரி வேகும்.
அடுப்பை சிம்மில் வைத்து வேக வைக்கவும். இல்லையென்றால், வடை வெளியில் மட்டும் கருத்து இருக்கும். ஆனால், உள்ளே மாவு அப்படியே இருக்கும். வடை நல்ல பிரவுன் நிறமாக வேண்டும்.
பின்னர் வடைகளை ஒரு டிஷ்யூ பேப்பரில் வைத்து ஒற்றி எடுக்க வேண்டும். இதனால், அதிகப்படியான எண்ணெயை தவிர்த்து விடலாம்.
உளுந்து வெல்ல வடை தயார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum