Top posting users this month
No user |
Similar topics
ஒரிஜினல் மசால் வடை
Page 1 of 1
ஒரிஜினல் மசால் வடை
பட்டாணிப்பருப்பு - கால் கிலோ
சின்ன வெங்காயம் - 150 கிராம்
கறிவேப்பிலை - சிறிது
மல்லித் தழை - சிறிது
பட்டை - சிறிய துண்டு
சீரகம் - அரை தேக்கரண்டி
மிளகு - கால் தேக்கரண்டி
சோம்பு - கால் தேக்கரண்டி
பூண்டு - 5 பற்கள்
இஞ்சி - ஒரு துண்டு
மிளகாய் வற்றல் - 6
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
பருப்பை தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பருப்பு ஊறியதும் எடுத்து தண்ணீர் முழுவதையும் வடித்து விடவும். சற்று உலர்ந்த தன்மை வரும் வரை வடிதட்டில் போட்டு வைக்கவும். வெங்காயம், மல்லி, கறிவேப்பிலை அனைத்தையும் பொடியாக நறுக்கவும்.
மிக்ஸியில் பட்டை, சீரகம், மிளகு, சோம்பு, பூண்டு, இஞ்சி, மிளகாய் வற்றல், உப்பு எல்லாவற்றையும் போட்டு பொடிக்கவும். இதனை நறுக்கி வைத்த வெங்காயத்துடன் சேர்த்து நன்கு பிசைந்துக் கொள்ளவும். பருப்பை மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து அனைத்தையும் நன்கு கலந்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கலந்த பருப்பு கலவையை சிறு வடைகளாக தட்டி எண்ணெயில் போட்டு மொறு மொறுப்பாக பொரித்து எடுக்கவும்.
சுவையான மசால் வடை தயார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum