Top posting users this month
No user |
மஹிந்த பௌத்த விஹாரைகளை அரசியல் மேடையாக்கி வருகின்றார்!– அனுரகுமார
Page 1 of 1

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, பௌத்த விஹாரைகளை அரசியல் மேடையாக்கி வருவதாக ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தங்காலையில் அண்மையில் நடைபெற்ற கூட்டமொன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்ச ஐயா தற்போது விஹாரைகள் நோக்கி அரசியலை நகர்த்தி வருகின்றார். எமக்குத் தெரியும் விஹாரரைகள் அரசியல் பேதமற்ற ஓர் பொது இடமாகும்.
அனைவரும் விஹாரையின் பீடாதிபதியிடம் சென்று கட்சி பேதமின்றி ஆலோசனை பெற்றுக்கொள்வர். அனைவரும் அதே விஹாரையிலேயே போதி பூஜை வழிபாடுகளை செய்வார்கள்.
எனினும் இன்று ராஜபக்ச என்ன செய்து வருகின்றார்? நாட்டின் அரசியலை மிகவும் அழுக்கான ஓர் நிலைக்கு இட்டுச்செல்கின்றார்.
பௌத்த விஹாரையில் போதனை செய்யும் மடுவத்தை மஹிந்த அரசியல் மடுவமாக மாற்றியுள்ளார். மஹிந்தவின் இந்த நடவடிக்கைகளுக்கு நாட்டின் அனைத்து மக்களும் எதிர்ப்பை வெளியிட வேண்டுமென அனுரகுமார திஸாநாயக்க கோரியுள்ளார்.
மோசடிகளில் ஈடுபட்டவர்கள் இனி கைதுசெய்யப்படமாட்டார்கள்- ஜேவிபி
இனிவரும் காலங்களில் மோசடிகள் தொடர்பில் அரசியல்வாதிகள் கைதுசெய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது
ஏனெனில் மோசடி விசாரணைகளில் அரசியல் செல்வாக்கு அதிகரித்துள்ளது என்று ஜேவிபி தெரிவித்துள்ளது.
தங்காலையில் நேற்று இடம்பெற்ற கருத்தாடல் ஒன்றின்போது கட்சியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
இந்த பிரச்சினைக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியுமே பொறுப்பேற்க வேண்டும் என்று அவர் குற்றம் சுமத்தினார்.
அரசியலில் முன்னேற்றத்தை பெற்றுக்கொள்வதற்காக ஐக்கிய தேசியக் கட்சியினரும், தமது ஆதரவாளர்கள் தக்கவைத்துக் கொள்ள ஜனாதிபதியும் முயன்று வருகிறார்கள்.
இதன்காரணமாக மோசடிக்காரர்கள் கைதுசெய்யப்படுகின்றமை தடுக்கப்பட்டுள்ளது என்று திஸாநாயக்க சுட்;டிக்காட்டியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum