Top posting users this month
No user |
நாட்டில் மீண்டும் சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர்!– கபீர் ஹாசிம்
Page 1 of 1

நாட்டில் மீண்டும் சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்த சிலர் முயற்சித்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.
நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலின் போது தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தோற்கடிக்க முழு முயற்சி எடுத்த தரப்பினர், பொதுத் தேர்தல் நடத்தப்படுவதனை தடுக்க முயற்சிக்கின்றனர்.
மீண்டும் நாட்டில் சர்வாதிகார ஆட்சியொன்றை உருவாக்க சூழ்ச்சி செய்கின்றனர்.
20ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதாக கூறி எதிர்வரும் பொதுத் தேர்தலை காலம் தாழ்த்தக் கூடாது.
உடனடியாக பொதுத் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
தற்போதைய அரசாங்கத்தை 100 நாட்களின் பின்னர் கலைக்காமல் விட்டதனால் கள்வர்களுக்காக கள்வர்கள் குரல் கொடுக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் மக்கள் அளித்த ஆணை நாடாளுமன்றிலும் பிரதிபலிக்க வேண்டும்.
தற்போதைய நாடாளுமன்றில் அந்த மக்கள் ஆணை பிரதிபலிக்கவில்லை.
எனவே புதிதாக நாடாளுமன்றம் ஒன்றை நிறுவ வேண்டியது அவசியமானது என கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகம் சிறிகொத்தவில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum