Top posting users this month
No user |
ஈழத் தமிழர் பிரச்சினையில் மத்திய அரசே! கள்ள மௌனம் கலைவது எப்போது?
Page 1 of 1

இலங்கையில் 2009ஆம் ஆண்டு ஒன்றரை லட்சம் ஈழத் தமிழர் படுகொலை செய்யப்பட்டு 6 ஆண்டுகளுக்குப் பின்னரும் தமிழருக்கு எதிரான மௌன யுத்தம் நீடிக்கிறது என்று அமெரிக்காவின் ஒக்லான்ட் கல்வி நிறுவன வல்லுநர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
ஒக்லான்ட் கல்வி நிறுவனத்தின் அறிக்கையில் இலங்கையில் இன்னமும் ஈழத் தமிழர்கள் எவ்வாறெல்லாம் ஒடுக்குமுறைக்குள்ளாகி வருகிறார்கள் என்பது அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழர் தாயகப் பிரதேசங்களில் 6 பேருக்கு ஒரு சிங்கள இராணுவ சிப்பாய் நிறுத்தப்பட்டுள்ளதையும் தமிழர் பிரதேசங்களில் வலுக்கட்டாயமாக சிங்களர் குடியேற்றங்கள் அமைக்கப்பட்டுள்ளதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தமிழரது பாரம்பரிய கலாச்சார சின்னங்கள் சூறையாடப்பட்டு சிங்கள பேரினவாத அடையாளங்களான பவுத்த விகாரைகள் நிறுவப்பட்டு வருவதையும் அந்த அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
அத்துடன் மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் தொடர்பாக நடவடிக்கை எடுப்போம் என்று கூறிக் கொண்டே தற்போதைய இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சர்வதேச சமூகத்தை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார் என்பதையும் ஒக்லான்ட் நிறுவன ஆய்வறிக்கை பட்டவர்த்தனமாக போட்டுடைத்துள்ளது.
உச்சகட்டமாக இலங்கையில் தமிழர் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிரான 'மௌன யுத்தம்' தொடர்கிறது என்றே ஒக்லான்ட் கல்வி நிறுவன வல்லுநர்கள் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளனர்.
அமெரிக்காவின் கல்வி நிறுவன ஆய்வாளர்கள் உட்பட சர்வதேச சமூகத்தின் மனசாட்சி கொண்ட மாந்தநேயம் மிக்க மனித உரிமை ஆர்வலர்கள் அனைவருமே இலங்கையில் 2009ஆம் ஆண்டுக்கு பின்னர் யுத்தம் என்ற ஒன்றுதான் நடைபெறவில்லையே தவிர மற்ற அனைத்து ஒடுக்குமுறைகளும் அப்படியே நீடிப்பதாகவே கூறிவருகின்றனர்.
ஆனால் இந்தியப் பேரரசு மட்டுமே இலங்கையிலே அமைதி திரும்பிவிட்டது; ஈழத் தமிழருக்கு சுபிட்சம் கிடைத்துவிட்டது என்று பொய் பிரசாரங்களை கட்டவிழ்த்துவிட்டு உலகத் தமிழினத்தை ஏமாற்றி வருகிறது.
இத்தகைய தமிழினத் துரோகத்தையும் ஈழத் தமிழர் நிலை தொடர்பான கள்ள மௌனத்தையும் கலைத்துவிட்டு இலங்கைத் தமிழ் மண்ணில் சிங்களப் பேரினவாதம் தொடர்ந்து அரங்கேற்றி வரும் ஒடுக்குமுறைகளை வன்மையாகக் கண்டிக்கும் வகையிலும் சிங்களப் பேரினவாதத்துக்கு கடிவாளம் போடும் வகையிலும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum