Top posting users this month
No user |
Similar topics
கேரட் ஐஸ்கிரீம்
Page 1 of 1
கேரட் ஐஸ்கிரீம்
கேரட் - 4
பால் - ஒரு கப்
சர்க்கரை - கால் கப்
மஞ்சள் பொடி (அ) ஃபுட் கலர் - அரை சிட்டிகை
ஒன்றிரண்டாக பொடித்த நட்ஸ் கலவை - 3 தேக்கரண்டி
வெனிலா எசன்ஸ் - கால் தேக்கரண்டி
தேவையான பொருட்களைத் தயாராக எடுத்துக் கொள்ளவும்.
கேரட்டைத் தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். நறுக்கிய கேரட்டை ஆவியில் வேக வைத்து, ஆறவிட்டு மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த கேரட்டுடன் சர்க்கரைச் சேர்த்து ஒரு அடிகனமான பாத்திரத்தில் ஊற்றி சூடேற்றவும். கலவை நன்கு சூடேறியதும் அதில் பாலை ஊற்றி நன்கு கலந்து ஆறவிடவும்.
ஆறியதும் வெனிலா எசன்ஸ், ஃபுட் கலர் சேர்த்து கலந்து ஃப்ரீஸரில் வைக்கவும்.
அரை மணி நேரம் கழித்து எடுத்து மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றியெடுத்து கப்புகளில் ஊற்றவும்.
அதில் பொடித்த நட்ஸ் தூவி மீண்டும் ஃப்ரீஸரில் வைத்தெடுத்துப் பரிமாறவும். குழந்தைகளைக் குஷிப்படுத்தும் சுவையான ஹோம்மேட் ஐஸ்கிரீம் ரெடி.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum