Top posting users this month
No user |
மும்பை மசாலா சிக்கன்
Page 1 of 1
மும்பை மசாலா சிக்கன்
கோழி - ஒன்று
தேங்காய் - அரை மூடி
பெரிய வெங்காயம் - 3
கசகசா - ஒரு மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
பூண்டு - 8 பற்கள்
இஞ்சி - ஒரு அங்குலத் துண்டு
மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
மல்லித் தூள் - ஒரு மேசைக்கரண்டி
சீரகத் தூள் - 2 தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
வினிகர் - 2 மேசைக்கரண்டி
பட்டை - 2 சிறு துண்டுகள்
கிராம்பு - 4
ஏலக்காய் - 4
உலர்ந்த திராட்சை - அரை கப்
முந்திரி - அரை கப்
தக்காளி - 2
கொத்தமல்லித் தழை - சிறிது
நெய் - 2 மேசைக்கரண்டி
தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும். கோழிக்கறியினை நன்கு கழுவி சுத்தம் செய்து, துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
திராட்சையைக் கழுவி சுத்தம் செய்து அரைத்துக் கொள்ளவும். பாதி அளவு முந்திரியை அரைத்து வைக்கவும். 2 வெங்காயத்தை நறுக்கிக் கொண்டு, அத்துடன் துருவிய தேங்காய், கசகசா, பூண்டு, இஞ்சி, கடுகு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் மிளகாய்த் தூள், மல்லித் தூள் மற்றும் சீரகத் தூளைப் போட்டு, சிறிது நீர் சேர்த்து மையாக கரைத்துக் கொள்ளவும். மீதமுள்ள ஒரு வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் நெய் விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு வதக்கி, பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
அதன் பிறகு மையாகக் கரைத்து வைத்துள்ள தூள் வகைகளையும், அரைத்து வைத்துள்ள தேங்காய், கசகசா கலவையையும் சேர்த்து பச்சை வாடை போகும் வரை மிதமானத் தீயில் வதக்கவும்.
பச்சை வாடை போய் நெய்யானது மிதக்கும் சமயம் நறுக்கிய தக்காளி மற்றும் கொத்தமல்லித் தழையைச் சேர்த்து மேலும் 3 நிமிடங்களுக்கு வதக்கவும்.
பிறகு கோழிக்கறியினைச் சேர்த்து லேசாக சிவக்கும் வரை நன்கு பிரட்டி வதக்கவும்.
அத்துடன் வினிகர் மற்றும் அரைத்து வைத்துள்ள திராட்சை, முந்திரி விழுதினைச் சேர்த்து, 2 கப் தண்ணீர் ஊற்றவும்.
பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து, குறைவானத் தீயில் வைத்து மூடி போட்டு வேகவிடவும்.
கறி நன்கு வெந்ததும் மீதமுள்ள முந்திரியை நெய்யில் வறுத்துச் சேர்த்து இறக்கவும். ரிச்சான டேஸ்டுடன் மும்பை மசாலா சிக்கன் தயார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum