Top posting users this month
No user |
Similar topics
வித்தியா படுகொலை சம்பவம்! கொடூரமான மனித நேயமற்ற செயல்: அமைச்சர் வேலாயுதம்
Page 1 of 1

யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் மிகவும் கொடூரமான மனித நேயமற்ற ஒரு துரதிஷ்டமாகும் என பெருந்தோட்டகைத்தொழில் இராஜாங்க அமைச்சர் கே. வேலாயுதம் தெரிவித்தார்.
வித்தியாவின் குடும்பத்திற்கு அனுதாபங்களை பெருந்தோட்டமக்கள் சார்பாக தெரிவிப்பதோடு, குற்றவாளிகளுக்கு அதிகூடிய தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
பெருந்தோட்டகைத்தொழில் இராஜாங்க அமைச்சர் கே. வேலாயுதம் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்.
நீண்டகால யுத்தத்தினால் உடல், உளபாதிப்புக்களுக்கு உள்ளாகியுள்ள ஒரு சமூகத்தில் இவ்வாறான கூட்டுபாலியல் வல்லுறவுச் சம்பவம் இடம்பெற்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும், தனது தந்தை எழும்பிநடமாட முடியாத நிலையில் சகோதரனின் உதவியுடன் கல்வி கற்று வந்த குறித்த மாணவிக்கு ஏற்பட்ட இவ்வாறான கொடுமை எதிர்காலத்தில் எந்தவொரு பெண்களுக்கும் ஏற்படக் கூடாது எனஅவர் குறிப்பிட்டார்.
மேலும், புங்குடுதீவில் இவ்வாறான சம்பவங்கள் கடந்த காலத்தில் இடம்பெற்ற போதிலும் அதனை தடுக்க பொலிஸார் சரியான முறையில் செயற்பட்டிருந்தால் வித்தியாவின் கொலையினை தடுத்திருக்க முடியும்.
நாட்டில் அனைத்து மக்கள் மத்தியிலும் சுமூகமான ஒருநிலை ஏற்பட்டுள்ள நிலையில் மாணவி வித்தியாவின் படுகொலையானது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாகவும், அதனுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள 9 பேருக்கும் பாராபட்சமற்ற முறையில் தண்டனை விதிக்கப்பட வேண்டும் எனவும் பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் கே. வேலாயுதம் தெரிவித்தார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» வித்தியா படுகொலை: யாழ். உடுப்பிட்டி மகளிர் கல்லூரி மாணவிகள் கவனயீர்ப்பு போராட்டம்
» இந்திய வம்சாவளி இலங்கையர்களுக்கு காணி உறுதிகள் வழங்கப்படவுள்ளன: அமைச்சர் வேலாயுதம்
» வித்தியா படுகொலை குறித்து கொழும்பில் பெண்கள் அமைப்பினர் ஊடகவியலாளர் மாநாடு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum