Top posting users this month
No user |
சோதிடர் சுமணதாசவே அப்பாவை கொலை செய்ய முயற்சித்தார்!– அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா
Page 1 of 1

அப்பாவை தான் கொலை செய்ய முயற்சிக்கவில்லை எனவும் அவவருக்கு தான் சேலைன் ஏற்றியதாகவும் சோதிடர் சுமணதாசவே அப்பாவை கொல்ல முயற்சித்ததாகவும் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார்.
தணமல்வில செவனகல முன்பள்ளியில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாங்கள் அப்பாவை கொல்ல முயற்சிக்கவில்லை. நாங்கள் அவருக்கு சேலைன் கொடுத்தவர்கள். நாங்கள் அவரது வெற்றிக்காக கூடியளவில் உழைத்தோம். குடும்பத்தினரும், சோதிடர் சுமணதாசவுமே அப்பாவை கொல்ல முயற்சித்தனர்.
நாங்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து விட்டதாக சிலர் கூறுகின்றனர். நாங்கள் சுதந்திரக் கட்சியை சேர்ந்தவர்கள்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் வெற்றிக்காக மொனராகலை மாவட்டத்தில் மாத்திரமல்ல நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று அர்ப்பணிப்புடன் பணியாற்றினேன்.
அப்பன் இறக்கவில்லை என காண்பிப்பதற்காக தான் மீண்டும் வந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி கூறுகிறார். நாங்கள் அப்பாவை கொலை செய்ய முயற்சிக்கவில்லை.
நான் மாத்திரமல்ல எனது மகன் கூட முன்னாள் ஜனாதிபதிக்காக இரவு பகல் பாராது தொலைக்காட்சி விவாதங்களில் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச, சுஜீவ சேனசிங்க, பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பீ. பெரேரா ஆகியோருடன் வாதிட்டோம்.
கட்சி மீதும் முன்னாள் ஜனாதிபதியின் மீதும் இருந்த உணர்வுகள் காரணமாகவே நாங்கள் இதனை மேற்கொண்டோம். அந்த உணர்வு இன்றும் இருக்கின்றது என அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா மேலும் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர், ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய விஜித் விஜயமுனி சொய்சா, அப்பா உயிரிழந்து விட்டதாகவும் இறந்தவர் தந்தை என்பதற்காக உடலை எவரும் வீட்டில் வைத்திருப்பதில்லை எனவும் இறுதி கிரியைகளை செய்து அடக்கம் செய்வதே மரபு எனவும் கூறியிருந்தார்.
அத்துடன் தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் செயலாளரும் போட்டியிட்டனர் எனவும் தாம் தலைவருக்கு ஆதரவாக செயற்பட்டதாகவும் தேர்தலில் தலைவர் தோற்றுப் போனதாகவும் செயலாளர் வெற்றி பெற்றதாகவும் இதனால், தாம் செயலாளரிடம் வந்து விட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum