Top posting users this month
No user |
மஹிந்த - மைத்திரி - ரணில் - பிரபா - சரத் ஆகியோரின் முன்மாதிரி பரிமாணங்களும் அவர்களின் மாற்றங்களும்!
Page 1 of 1

இலங்கையில் உள்ள அரசியல் தலைவர்களின் முன்மாதிரி பரிமாணங்கள் தொடர்பில் நிபுணர் ஒருவர் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
12 முன்மாதிரி பரிமாணங்கள் தலைமைத்துவத்தில் மாற்றங்கள் கொண்டு வருவதில் செல்வாக்கு செலுத்துவதாக நிபுணர் மைக்கல் நுகேவெல நேற்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் தெரிவித்தார்.
அப்பாவித்தனம், அனாதை, போர்வீரர், பராமரிப்பாளர், ஆய்வாளர், அன்பானவர், அழிப்பவர், உருவாக்குனர், ஆட்சியாளர், வித்தைக்காரர், முனிவர், வேடிக்கையாளர் என்ற அடிப்படையிலேயே இந்த முன்மாதிரிகள் இனங்காணப்படுகின்றன.
இந்த முன்மாதிரியே அரசியல் தலைவர்களின் வெற்றிக்கு வழிவகுத்துள்ளன.
அதேநேரம் இந்த முன்மாதிரிகள் அனுகூலங்களையும் அதேபோல பிரதிகூலங்களையும் கொண்டுள்ளன.
நாட்டின் 30 வருடப்போர் காலத்தில் இலங்கையில் அழிப்பவர் என்ற முன்மாதிரி பலரை அனாதைகளாக்கியது. போர்வீரர்களின் கட்டளை அதிகாரம் சமூகத்தை கட்டுப்படுத்தி வைத்திருந்தது.
2009ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ச, போரில் வெற்றிப்பெற்றார். எனினும் சமாதானத்தை கொண்டு வருவதில் தோல்விக்கண்டார்.
போருக்கு பின்னர் நாட்டில் மாற்றங்கள் தேவைப்பட்டன.
இந்தநிலையில் போர்வீரர் என்ற முன்மாதிரியின் பின்னர் அவரால் நகர முடியவில்லை. எனவே அவரால் நாட்டுக்கு தேவையான மாற்றத்தை கொண்டு வரமுடியவில்லை. இதன்காரணமாக பாரிய சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டி யேற்பட்டது.
மஹிந்த ராஜபக்சவை பொறுத்தவரையில், ‘நாங்கள் மேற்கத்தைய இசைக்கு நடனமாட முடியாது’ என்ற வாசகம் அவருக்கு துணைபுரிந்தது. ராஜபக்ச, போர் வீரராகவும் கோபம் கொண்டவராகவும் தம்மை காட்டிக்கொண்டார்.
அவர் மேற்கத்தைய நாடுகளுக்கும், புலம்பெயர்ந்தோருக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வில்லனாக தென்பட்டார். அவர், “நீங்கள் கூடாதவர். நான் நல்லவன். நீங்கள் பிழை செய்கிறீர்கள் நான் பிழை செய்யவில்லை” என்பதை வலியுறுத்தி வந்தார்.
இது மேன்மை மனப்பான்மையை அவருள் உருவாக்கியது. இந்த மேன்மை மனப்பான்மையின் பலனாக பிரதிகூலங்கள் ஏற்பட்டன. இதனால் சமூகத்தின் பிரச்சினைகளை தீர்க்க முடியாமல் போனது.
எப்போது ஆணவம் முன்னிலைப்படுத்தப்படுகிறதோ, அன்று நீ அதிகாரத்தில் இருந்து கீழிறங்க வேண்டியேற்படும். இதன் அடிப்படையிலேயே முன்னைய ஆட்சியாளர் அதிகாரத்தில் இருந்து கீழிறங்க வேண்டியேற்பட்டது என்று நுகேவெல தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் போரினால் அனாதையானோரின் முன்மாதிரியால், 2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதியன்று போர்வீரர் தன்மைக்கு சவால் ஏற்பட்டது.
அழிப்பவரின் நிலைமைக்கு பாதகநிலை ஏற்பட்டது. போரினால் பாதிக்கப்பட்டவர்கள் மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக வாக்களித்த நிலையில், நலன்பேணுவோர், ஆய்வாளர்கள் மற்றும் உருவாக்குனர் ஆகியோர் எதிர்கால நலன்கருதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்தனர்.
அதாவது பொதுமக்கள், நலன்பேணுபவர் என்ற அடிப்படையில் மைத்திரிபால சிறிசேன மற்றும் ஆட்சி ஞானமுள்ளவரான ரணில் விக்ரமசிங்க ஆகியோரை ஆட்சியில் அமர்த்தினர்.
ரணிலை பொறுத்தவரையில் அவரால், மக்கள் மத்தியில் உள்ள நோக்கங்களை சரிபார்த்து நடக்க முடியும். எனினும் அவர் அன்பாகவும் வித்தைக்காரராகவும் தமது முன்மாதிரிகளை வெளிக்காட்ட வேண்டும்.
முன்னர் அவர் மக்களுடன் தொடர்புகளை பேணாமையே அவரின் அரசியல் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்தது.
எனவே அவர், அரசியல் ஞானத்துடன் ஏனைய முன்மாதிரிகளையும் பின்பற்ற வேண்டும். இந்தநிலையில் ஒத்துழைப்பு மற்றும் பண்புகளையும் கொண்ட மைத்திரிபாலவும், அரசியல் ஞானம் கொண்ட ரணில் விக்ரமசிங்கவும் இணைந்து தூரநோக்கத்தில் நாட்டில் மாற்றங்களை கொண்டு வரமுடியும்.
எனினும் யார் இதில் வித்தைக்காரராக மாறி இலங்கையில் மாற்றங்களை கொண்டு வருவார் என்பது கேள்விக்குரியது என்று நுகேவெல குறிப்பிட்டுள்ளார்.
வேலுப்பிள்ளை பிரபாகரன் போர்வீரராக மாத்திரம் இருந்தமையால் தமது முன்னோக்கத்தில் இருந்து அவரால் நகரமுடியவில்லை.
எனினும் சரத் பொன்சேகா, வித்தைக்காரராக இருந்தமையால் தமது முன்னோக்கத்தில் மாற்றங்களை பெற்றுள்ளார் என்று நுகேவெல தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum