Top posting users this month
No user |
Similar topics
செட்டிநாடு சிக்கன் குருமா
Page 1 of 1
செட்டிநாடு சிக்கன் குருமா
கோழிக்கறி - அரை கிலோ
பெரிய வெங்காயம் - 3
தக்காளி - 2
இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
தனியா தூள் - 3 தேக்கரண்டி
சீரகத் தூள் - ஒரு தேக்கரண்டி
சோம்பு தூள் - ஒரு தேக்கரண்டி
தேங்காய் - ஒரு மூடி
கசகசா - 2 தேக்கரண்டி
முந்திரி - 10
பொட்டுக்கடலை - ஒரு கைப்பிடி
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய் - 3 தேக்கரண்டி
பட்டை - சிறிது
கிராம்பு - 3
அன்னாசிப் பூ - 2
சோம்பு - அரை தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 5
கோழியை பெரிய துண்டுகளாக்கி சுத்தம் செய்து கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும்.
தேங்காயுடன் முந்திரி, கசகசா மற்றும் பொட்டுக்கடலைச் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும். மிளகாயை இரண்டாக கிள்ளி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, வெங்காயம் போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளி மற்றும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து, தக்காளி குழையும் வரை வதக்கவும்.
நன்றாக வாசனை வந்தவுடன் கோழிக்கறியைச் சேர்த்து வதக்கவும்.
சிறிது வதங்கியதும் மிளகாய் தூள், தனியா தூள், சீரகத் தூள், சோம்பு தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறிவிட்டு மூடி வேகவைக்கவும்.
கோழிக்கறி முக்கால் பதம் வெந்ததும் தேங்காய் விழுதைச் சேர்க்கவும்.
அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து கிளறிவிட்டு நன்கு வேகவிடவும். கோழிக்கறி முழுவதும் வெந்ததும் இறக்கிவிடவும்.
சுவையான செட்டிநாடு சிக்கன் குருமா ரெடி.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum