Top posting users this month
No user |
Similar topics
ஓமு ரைஸ் (ஆம்லெட் ரோல்டு ஃபிரைடு ரைஸ்)
Page 1 of 1
ஓமு ரைஸ் (ஆம்லெட் ரோல்டு ஃபிரைடு ரைஸ்)
வடித்த சாதம் - 1 கப்
குடைமிளகாய் - 1/4
வெங்காயம் - 1/4
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
வேக வைத்த மக்காசோளம் - 1 தேக்கரண்டி
தக்காளி சாஸ் - 4 தேக்கரண்டி
முட்டை - 2
உப்பு, எண்ணெய் - தாளிக்க மற்றும் ஆம்லெட் போட
தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் காய்ந்தவுடன், வெங்காயம், குடைமிளகாய் இவைகளை வதக்கவும்.
பின் இதனுடன் சாதம், மிளகு தூள் இவைகளை சேர்த்து கலக்கவும்.
பின் தக்காளி சாஸ் சேர்த்து கலக்கி, அடுப்பை அணைக்கவும்.
பின் மக்காசோளத்தை சேர்த்து கலக்கவும்.
முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்து ரெடியாக வைக்கவும். அடுப்பில் தோசைக்கல் (அ) அகலமான தவாவை வைத்து, ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு, நன்கு காய்ந்தவுடன் அடித்து வைத்து இருக்கும் முட்டையை அகலமான ஆம்லெட்டாக ஊற்றவும்.
இரண்டு நிமிடம் கழித்து ரெடியாக வைத்து இருக்கும் ப்ரைடு ரைஸை ஆம்லெட்டின் நடுவில் வைக்கவும்.
இப்பொழுது முட்டையின் மேல் மற்றும் கீழ் பகுதியை மடித்து விடவும்.
ஓமு ரைஸ் தயார்.
பரிமாறும் தட்டினை ஓமு ரைஸின் மேல் கவிழ்த்து வைக்கவும்.
பின் தவாவை தலை கீழாக மாற்றவும்.
ஓமு ரைஸ் சாப்பிடும் தட்டிற்கு மாற்றி ஆகிற்று. இப்பொழுது தக்காளி சாஸ் கொண்டு விருப்பத்திற்கு (குழந்தைகளுக்கு எனில் விருப்பமான கார்டூன் படங்கள்) ஏற்றமாதிரி அலங்கரிக்கவும்.
சுவையான ஓமு ரைஸ் இப்பொழுது சாப்பிட தயார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum