Top posting users this month
No user |
Similar topics
நச்சினார்க்கினியர் உரை நெறி
Page 1 of 1
நச்சினார்க்கினியர் உரை நெறி
ஆசிரியர் : ச.குருசாமி
வெளியீடு: ஆசிரியர்
பகுதி: ஆன்மிகம்
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
05. ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பிய உரையாசிரியர்
களுள் சீர்த்தி மிக உடைய பெரும் புலமையாளர் நச்சினார்க்கினியர். அவரை விரும்பியவருக்கு அவர் இனியராம். எத்தகைய பொருள் பொருத்தம் பெயரிலேயே அமைந்துவிட்டது.
முன்னரே இளம்பூரணர் உரைநெறி, சேனா வரையர் உரைநெறி எனும் நூல்களைப் படைத்தளித்த பேராசிரியர் முனைவர் ச.குருசாமியே இந்நூலையும் படைத்துள்ளார். பதினான்கு அத்தியாயங்களில் கனமான செய்திகளை, ஆராய்ச்சி முடிவுகளை எளிமையாக்கித் தந்துள்ளார் நூலாசிரியர்.
நூலின் ஒரு சிறப்பு, பதிப்புத்துறை பற்றிய வரலாற்றோடு நூல் தொடங்குகிறது. தொல்காப்பியப் பழம் பதிப்புகள், உரைப்பதிப்புகள் ஆகிய வரலாறுகள் குறிக்கப்பட்டுள்ளன. பாண்டித் திருநாட்டில் பதினான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த சைவநெறிப் புலவர் நச்சினார்க்கினியர் பன் முகப் புலமை கொண்டவர் இவர். இவரது உரைநெறி தனிப்பண்புகளைக் கொண்டது என்பதை நூல் எடுத்துக்காட்டியுள்ளது.
அதிகார விளக்கம், இயல் விளக்கம், நூற்பா விளக்கம், சொற் பொருள் விளக்கம் என நச்சினார்க்கினியர் உரை படர்ந்து செல்கிறது. சிறப்பாக, வினாவிடை, மூலபாட விளக்கம், பாடவேறுபாடு, ஏற்பும் மறுப்பும் என நூல் விரிந்து செய்கிறது.
உரைமுறைகளாகக் கொண்டு கூட்டிப் பொருள் காணுதலும், பிறர் கூறியவாறே கூறுக ஒக்கும் என்றுரைப்பதும், காட்டுதும், காட்டினாம் என்பதும், நூற்பா வரையறையும் என ஒரு சுவைமிகுந்த இலக்கணப் பயணத்தை இந்நூல் வழங்குகிறது. உரையில் இலக்கண முடிவுகளும், சமுதாய நிலை, முரண்பாடுகள், உடன்பாடுகள் என்று பற்பல வகையால் நூலாசிரியர் ஆய்ந்துள்ள திறனும் புலனாகின்றன.
"கற்றோர்க்கு இனிக்கும் கரும்பாகும் நூலின் பயனை நாம் எய்தி மகிழ வேண்டும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum