Top posting users this month
No user |
Similar topics
மஷ்ரூம் பிரியாணி
Page 1 of 1
மஷ்ரூம் பிரியாணி
பாசுமதி அரிசி - 2 கப்
மஷ்ரூம் - 10 - 15
வெங்காயம் - ஒன்று (பெரியது)
தக்காளி - ஒன்று (பெரியது)
பச்சை மிளகாய் - 2
தயிர் - 2 மேசைக்கரண்டி
மிளகாய்த் தூள் - அரை தேக்கரண்டி
கரம் மசாலாத் தூள் - அரை தேக்கரண்டி
பிரியாணி மசாலா - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
தேங்காய் பால் - 2 கப்
உப்பு - தேவைக்கேற்ப
தாளிக்க:
பிரியாணி இலை - ஒன்று
அன்னாசிப்பூ - பாதி
ஏலக்காய் - 2
எண்ணெய் - 4 மேசைக்கரண்டி
அரைக்க:
வெங்காயம் - பாதி
தக்காளி - பாதி
மிளகு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
அரைக்க வேண்டிய பொருட்களை நீர் சேர்க்காமல் அரைத்து வைக்கவும். (நீர் சேர்த்து அரைக்க விரும்பினால் மிகக் குறைவாக சேர்க்கவும்). அரிசியைக் களைந்து ஊற வைக்கவும். மஷ்ரூமைச் சுத்தம் செய்து 4 துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாயை நறுக்கி வைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பிரியாணி இலை, அன்னாசிப்பூ, ஏலக்காய் தாளித்து, இஞ்சி, பூண்டு விழுது சேர்க்கவும். பிறகு வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சிவந்ததும் தக்காளி சேர்த்து, சிறிது உப்பும் சேர்த்து வதக்கவும்.
தக்காளி பாதி வதங்கியதும் அரைத்து வைத்துள்ள விழுதைச் சேர்த்து வதக்கி, மூடி வைத்து இடையிடையே திறந்து கலந்துவிட்டு வதக்கவும்.
நன்றாகக் குழைந்து எண்ணெய் பிரிந்து வரும். பிறகு தூள் வகைகளைச் சேர்த்து கலந்துவிடவும்.
பிறகு தயிர் சேர்த்து நன்றாகக் கலந்துவிடவும்.
அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து கலந்து வந்ததும், மஷ்ரூமைச் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும். (மூடி வைக்க வேண்டாம்).
பிறகு தேங்காய் பால் மற்றும் ஒன்றரை கப் நீர் விட்டு உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
கொதி வந்ததும் ஊற வைத்த அரிசியைச் சேர்த்துக் கலந்து, மீண்டும் ஒரு கொதிவரவிடவும். ஒரு கொதி வந்ததும் சிறு தீயில் வைத்து மூடி போட்டு வேகவிடவும்.
நன்றாக வெந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி, குழையாமல் ஒரு முறை கிளறிவிட்டு மூடி வைக்கவும்.
டேஸ்டி & ஸ்பைசி மஷ்ரூம் பிரியாணி ரெடி.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum