Top posting users this month
No user |
Similar topics
மங்கள சமரவீரவின் ஜேர்மன் விஜயம் கூறுவது என்ன?
Page 1 of 1

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பேர்லினுக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின்போது, ஜேர்மனி வெளியுறவு அமைச்சர், பிராங்க்-வால்டர் ஸ்ரைன்மயரை சந்தித்துள்ளார்.
அவரின் அழைப்பின் பேரில் கடந்த 21 முதல் 23 வரை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர விஜயம் மேற்கொண்டதுடன் இது அவரது முதல் விஜயமாகும்.
அமைச்சரின் இவ்விஜயத்தின் போது ஜேர்மனியுடனான உறவுகளை புதுப்பிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இலங்கையின் மிகப்பெரிய பங்காளி நாடாக ஐரோப்பா விளங்குகின்றது.
இலங்கை இளைஞர்களுக்கு தொழில்நுட்பம் மற்றும் தொழில்முறை பயிற்சி உட்பட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்புகள் மூலம் உறவு புதுப்பிக்கப்பட்டுள்ளதோடு மற்றும் வர்த்தக முதலீட்டு விரிவடைந்துள்ளது.
நாட்டு ஒருங்கிணைப்பு மற்றும் பொருளாதாரம் தொடர்பில் அங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.
குறிப்பாக வீழ்ந்திருக்கும் ஜனநாயகத்தை கட்டியெழுப்புவது, அமைப்புக்களை வலுப்படுத்தல், சட்ட சீர்த்திருத்தங்கள், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையிலுள்ள அதிகாரங்களை மட்டுப்படுத்தல், சட்ட வலுப்படுத்தல், ஊழலுக்கெதிராக நடவடிக்கைகள், நல்லிணக்க செயற்பாடுகள் என்பன தொடர்பிலும் வெளிவிவகார அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.
குறித்த விஜயத்தின் போது வெளியுறவு அமைச்சர் வெளியுறவு பிரமுகர்களை சந்தித்து இலங்கை அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டம் குறித்தும் கலந்துரையாடியுள்ளார்.
நல்லாட்சியை நிறுவுவதின் மூலம் சட்டத்தின் ஆட்சி, உறுதியான ஜனநாயக ஸ்தாபனங்கள், நல்லிணக்கம், நிலையான பொருளாதார வளர்ச்சி, மற்றும் பிரிவினையற்ற அரசியலின் ஒரு புதிய அரசியல் கலாச்சாரம் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் வெளிநாடுகளில் அகதிகளாக உள்ள இலங்கையர்கள் மீளழைக்கப்பட்டுள்ளமை குறித்தும் அமைச்சர் மங்கள சமரவீர, ஜேர்மனியின் வெளிவிவகார அமைச்சருக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.
புலம்பெயர் அமைப்புக்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி செயற்படுவதன் முக்கியத்துவத்தையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச சமுகம் மற்றும் அமைப்புகளுடன் சுமூக செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான இலங்கையின் முயற்சி குறித்தும் அமைச்சர் மங்கள சமரவீரவினால் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வட,கிழக்கு மாகாணங்களில் நிர்வாகத்துறை சார்ந்தவர்கள் ஆளுனர்களாக நியமிக்கப்பட்டமை, அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் பல நீக்கப்பட்டுள்ளமை, மற்றும் காணி விடுவிப்பு போன்ற விடயங்கள் குறித்தும் அமைச்சர் மங்கள சமரவீர தெளிவுபடுத்தியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» உலக வங்கி இலங்கைக்கு வழங்கிய பணத்திற்கு என்ன நடந்தது: மங்கள கேள்வி
» இந்தியா வந்துள்ள ஜேர்மன் சான்சலருக்கு உற்சாக வரவேற்பு
» ஜேர்மன் நாட்டு தூதுக் குழுவினர்- கிழக்கு முதலமைச்சர் சந்திப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum