Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


தாலியைக் கட்டுவானே அவன் தாலி (யக்) கட்டுவான்

Go down

தாலியைக் கட்டுவானே அவன் தாலி (யக்) கட்டுவான் Empty தாலியைக் கட்டுவானே அவன் தாலி (யக்) கட்டுவான்

Post by oviya Sun May 24, 2015 3:02 pm

திருமண மண்டபத்தில் தாலியை எடுத்த சுப்பிரமணிய சுவாமி அதை மணமகனிடம் கொடுக்காமல் தானே கட்ட முயன்றதனால் திருமண மண்டபத்தில் ஒரே சிரிப்பு. அட! சுப்பிரமணியனின் செயல் எதுவும் வித்தியாசமானதாகத்தான் இருக்கும். அதில் இதுவும் ஒன்று என திருமண வீட்டுக்கு வந்திருந்தவர்கள் கூறியிருப்பர்.
மற்றவர்களை ஏசுவதிலும் நாகரிகம் பேணுகின்றவர்கள் நாங்கள். அதனால்தான் நாசமறுப்பானே! தாலியைக் கட்டுவானே! என்ற பதங்களை ஏசும் மொழியாகக் கொண்டோம்.

ஏசும் பதங்கள் மொழியில் மோசமானவை போல இருந்தாலும் உட்பொருள் வாழ்த்து மொழியாக இருப்பதனைக் காணமுடியும்.

நாசத்தை அறுப்பவன் என்பது நல்லதைச் செய்பவன் என்று பொருள்படும். எனினும் நாசம் என்ற மறை பதம் உன்னிப்பதால் அது ஏசுமொழிப் பதமாக தோற்றம் பெறுகின்றது.

இதே போன்றே தாலியைக் கட்டுவானே என்பதும் திருமணம் ஆகாத இளைஞனைப் பேசுவதற்காக நம் முன்னோர்கள் கையாண்ட சொற்பதமாகும்.



தாலியைக் கட்டுவது என்பது மங்கலகரமான செயல். ஆக மங்கலகரமான செயலை செய்ய இருப்பவனே என்று விழித்துப் பேசுவது எங்கள் தமிழ்ப் பண்பாட்டின் உயர்வு எனலாம்.

அண்மையில் தமிழகத்தில் பாரதிய ஜனதாக் கட்சியின் சுப்பிரமணிய சுவாமி திருமண வைபவம் ஒன்றுக்குச் சென்றிருந்தார். தனது கட்சி சார்ந்த பிரமுகரின் திருமணம் அது. தாலியை எடுத்துக் கொடுப்பது சுப்பிரமணிய சுவாமியின் கடமையாக இருந்தது.

திருமணத்தின் போது தாலியை எடுத்துக் கொடுப்பது கூட தமிழர் பண்பாட்டின் ஒரு சம்பிரதாயமாகக் கருதப்பட்டது.

நல்லவர்கள், பெரியவர்களின் கையால் தாலியை எடுத்துக் கொடுக்க அதை மணமகன், மணமகள் கழுத்தில் கட்டிக் கொள்வார். இதுவே நடைமுறை. ஆனால் அந்த நடைமுறையை மறந்து போன சுப்பிரமணிய சுவாமி தாலியை எடுத்துத் தானே மண மகள் கழுத்தில் கட்டிவிட முற்பட்டார்.



இதனால் திருமண வீட்டில் ஒரே பரபரப்பு. அருகில் நின்ற பெண்கள் ஏங்கிப் பதறி அடித்து சுப்பிரமணிய சுவாமி தாலி கட்டுவதைத் தடுத்து விட்டனர்.

திருமண மண்டபத்தில் தாலியை எடுத்த சுப்பிரமணிய சுவாமி அதை மணமகனிடம் கொடுக்காமல் தானே கட்ட முயன்றதனால் திருமண மண்டபத்தில் ஒரே சிரிப்பு. அட! சுப்பிரமணியனின் செயல் எதுவும் வித்தியாசமானதாகத்தான் இருக்கும். அதில் இதுவும் ஒன்று என திருமண வீட்டுக்கு வந்திருந்தவர்கள் கூறியிருப்பர்.

இப்போ சுப்பிரமணிய சுவாமியை ஏசுவதாக இருந்தால் தாலியைக் கட்டுவானே என்று ஏசுவது பொருத்தமாகாது. ஏனெனில் அந்தாள் அந்த ஏசு மொழியைப் பயன்படுத்தியே மணமகள் கழுத்தில் தாலியைக் கட்டி முடித்து விடுவார்.

தேவையாயின் நீதிமன்றத்திற்குச் சென்று தாலியைக் கட்டுவானே என்று என்னை ஏசியதனால் நானே தாலியைக் கட்டும் தகைமை உடையவன். மணமகனுக்கு தாலி கட்டும் உரிமை கிடையாது என்று மனுத்தாக்கல் செய்து அதில் வெற்றியும் பெற்றுவிடுவார். ஆகையால் சுப்பிரமணிய சுவாமியை ஏசுவதிலும் கவனமாக இருக்கவேண்டும்.

அப்படியானால் எப்படி ஏசுவது? “அட! தாலியைக் கட்டுபவனே” “அவன் தாலியைக் கட்டுவான்” என்று ஏசுவது பொருந்தும்.

என்ன செய்வது! எவரையும் குழப்ப வேண்டும் என்று நினைப்பவர்கள் நல்ல காரியங்களைச் செய்யும் போதும் அதில் குழப்பங்கள் ஏற்பட்டு விடுகின்றன.

மனம் மிகவும் முக்கியமானது. மனப்பக்குவம், மன உறுதி, நேர்மை, மனச்சாட்சி என்பன நல்ல மனிதர்களின் அடையாளங்கள். இத்தகையவர்கள் எதைச் செய்தாலும் அதில் உயர்வான ஒழுங்கு தென்படும்.

மாறாக சுப்பிரமணிய சுவாமி போன்றோர்கள் நல்லவை செய்தாலும் அதில் மாறாத வழுக்களை; தவறுதல்களை கொடுத்து விடும். இதற்கான நல்ல உதாரணம்தான் தாலியை மணமகனிடம் கொடுக்காமல் மணமகளின் கழுத்தில் சுப்பிரமணிய சுவாமி கட்டப் போன சம்பவம் ஆகும்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum