Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


சில்லென்று உடலை வருடும் ஈரக்காற்று: மெய்சிலிர்க்க வைக்கம் டார்ஜிலிங்

Go down

சில்லென்று உடலை வருடும் ஈரக்காற்று: மெய்சிலிர்க்க வைக்கம் டார்ஜிலிங் Empty சில்லென்று உடலை வருடும் ஈரக்காற்று: மெய்சிலிர்க்க வைக்கம் டார்ஜிலிங்

Post by oviya Sat May 23, 2015 1:33 pm

பனி படர்ந்த மலைகள், பச்சை ஆடை உடுத்திய வனப்பகுதிகள், சோலை வனங்கள், நீர்நிறைந்த எழிலார்ந்த ஏரிகள், எந்நேரமும் சில்லென்று உடலை வருடும் ஈரக்காற்று என இத்தகைய சிறப்பம்சங்களை கொண்டது தான் மேற்கு வங்க மாநிலத்தில் அமைந்துள்ள டார்ஜிலிங்.
அள்ள, அள்ளக் குறையாத இன்பங்களை வாரித்தரும் ஓர் அற்புதமான சுற்றுலாத்தலம் டார்ஜிலிங் என்றால் அது மிகையல்ல.

எந்நேரமும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் தேனீக்கள் போல மொய்த்திருக்கும் இடம்தான் டார்ஜிலிங்.

இங்கு அமைந்துள்ள தேயிலை தொழிற்சாலைகள் மற்றும் டார்ஜிலிங் இமாலய ரயில்வே யுனெஸ்கோ பராம்பரிய தளங்களுள் ஒன்றாகும்.

பார்க்க வேண்டிய இடங்கள்

Kurseong

டார்ஜிலிங்கிலிருந்து 81 கிலோ மீற்றர் தொலைவில் Kurseong அமைந்துள்ளது. இவை வெள்ளை வளைவு(White Archid) என்றும் அழைப்படுகிறது.

ஏனெனில் சிறிய கட்டிடம், வருடம் முழுவதும் மிதமான வானிலை, அமைதியான இடம் என சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்கிறது.

பாடல்களை எழுதுதல், பாடல்களுக்கு இசையமைப்பதற்கான உத்வேகத்தை ரவீந்திர நாத் தாகூருக்கு இந்த இடம் அளித்துள்ளது.

மேலும் பல கலைஞர்களும் இந்த அமைதியான இடத்திற்கு வந்து செல்வார்கள், மேலும் இங்கு சிலிகுரி மலை அமைந்துள்ளது, கோடைக்காலத்தின் மாலைப்பொழுதில் இங்கு அமர்ந்து பார்த்தால் சிலிகிரி நகரத்தின் அழகை ரசிக்கலாம்.

இங்கிருந்து 4 கிலோ மீற்றர் தொலைவில் Giddhapahar என்ற இடத்தில் நேதாஜி மியூசியம் உள்ளது, இங்கு அவர் சம்பந்தப்பட்ட கட்டுரைகள் மற்றும் ஆவணங்கள் உள்ளன, இது நேதாஜியின் சகோதரனால் பராமரிக்கப்பட்டு வருகிறது.



மிர்க் ஏரி

மிர்க் ஏரியில் உல்லாசப் படகு சவாரி செய்யலாம். இதற்காக பலவிதமான வண்ணங்களில் பலவிதமான படகுகள் படகுத்துறையில் நமக்காகவே காத்திருக்கும்.

இந்த ஏரியில் கஞ்சன்ஜீங்கா மலையின் பிரதிபலிப்பை காணலாம், இங்குள்ள காடுகளில் ஆயிரக்கணக்கான ஜப்பான் மரங்கள் என்று அழைக்கப்படும் Cryptomaria மரங்கள் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

மிர்க் ஏரியிலிருந்து இரண்டு மீற்றர் தொலைவிற்கு ஆரஞ்சு தோட்டங்களை பார்க்கலாம். மேற்கு வங்க மாநிலத்திலேயே ஆரஞ்சு பயிரிடுவதில் சிறந்த இடமாக மிர்க் கருதப்படுகிறது.



டார்ஜிலிங் இமாலய ரயில்வே

மலைப்பாதை ரயில் பயணங்களில் இன்று வரை ஒரு சிறந்த உதாரணமாக விளங்குவது டார்ஜிலிங் இமாலய ரயில்வே ஆகும். இந்த ரயிலுக்கு பொம்மை ரயில்(Toy Train) என்ற பெயரும் உண்டு.

இந்த ரயில் பாதை புது ஜால்ப்பைகுரி மற்றும் டார்ஜிலிங் இடையேயுள்ள 78 கிலோமீற்றர் பாதையை இணைக்கின்றது. இந்த பாதையில் இருந்து கும்(Ghum) ரயில் நிலையத்துக்கும் (இந்தியாவின் உயரமான இடத்தில் அமைந்துள்ள ரயில் நிலையம்) தினசரி ரயில்கள் இயக்கப்படுகின்றன. சாலைகளிலும் , மார்க்கெட்களிலும் இந்த ரயில் புகுந்துசெல்லும் அழகே தனி.

தொழில்நுட்ப சாதனைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த ரயில்வே, 1881ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 1999ம் ஆண்டு யுனெஸ்கோவால் உலக பராம்பரிய சின்னங்களுள் ஒன்றாக அறிவிக்கப்பட்டது. உலகளவில் இந்த பெருமையை பெற்ற இரண்டாவது ரயில் பாதை இதுவாகும்.



டைகர் மலை

டார்ஜிலிங்கில் இருந்து 11 கிலோமீற்றர் தொலைவில் உள்ளது இந்த டைகர் மலை. இங்கிருந்து சூரிய உதயத்தை பார்க்கும்போது கஞ்சென்சுங்கா (kanchenjunga) மலைகள் மீது சூரிய கதிர்கள் பட்டு பல வண்ணங்களில் பிரதிபளிப்பதை நீங்கள் உணரலாம்.

உலகின் உயரமான மலை உச்சியான மவுண்ட் எவரஸ்டையும் இங்கிருந்தபடி பார்க்கலாம் என்பது மேலும் சிறப்பு. டைகர் மலையில் உள்ள பழமையான சென்சல் வன உயிரியல் பூங்காவும் கணிசமான பார்வையாளர்களை தன்னகத்தே கொண்டுள்ளது.



பட்டாசியா வளைவு

டார்ஜிலிங்கில் இருந்து 5 கிலோ மீற்றர் தொலைவில் உள்ளது . இந்த வளைவில் டார்ஜிலிங் இமாலய ரயில் 360 கோணத்தில் வளைந்து திரும்புகிறது. மேலும் இங்குள்ள மார்க்கெட் பகுதியில் கைவினைப்பொருட்கள், பை போன்றவற்றை சுற்றுலா பயணிகள் வாங்கி செல்கின்றனர்.

புத்த மடாலயம்: இங்குள்ள ஜலபாகர் மலை சரிவுகளில் ஜப்பானிய புத்த பிச்சு நிப்போன்ஜன் மொயொஹொஜி(Nipponzan Myohoji) என்பவரால் எழுப்பப்பட்டது இந்த மடாலயம். இங்கு புத்தரின் நான்கு அவதாரங்கள் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum