Top posting users this month
No user |
மைத்திரியையும் மஹிந்தவையும் இணைக்கும் முயற்சியில் முன்னாள் பிரதமர்
Page 1 of 1

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் முன்னாள் பிரதமர் டி.எம். ஜயரட்ன ஈடுபட்டுள்ளார்.
மஹிந்தவையும் மைத்திரியையும் ஒரே மேடையில் ஏற்றும் முயற்சியை முன்னாள் பிரதமர் டி.எம். ஜயரட்ன தலைமையிலான குழுவொன்று மேற்கொண்டு வருகின்றது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பைச் சேர்ந்த 15 உறுப்பினர்கள் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இவ்விருவரையும் இணைக்கும் முயற்சி குறித்து எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியை தோற்கடிக்க வேண்டுமெனவும் அதற்கு மைத்திரி – மஹிந்த கூட்டணி தேர்தலில் களமிறங்க வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது.
அவ்வாறு செய்யாவிட்டால் நாடு ஆபத்தில் சிக்கக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டை காப்பாற்றும் பொறுப்பு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அனைத்து உறுப்பினர்களுக்கும் உண்டு என முன்னாள் பிரதமர் தெரிவித்துள்ளார்.
மேலும் 1994ம் ஆண்டு முதல் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு நாட்டை மீட்டெடுப்பதில் முனைப்பு காட்டி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 13ம் உறுப்பினர் என்ற வகையில் நாட்டை பாதுகாப்பது தமது கடமையாகும்.
பெரும்பான்மை கட்சி உறுப்பினர்களின் கருத்துக்கு கட்சியின் தலைவர் மைத்திரிபால செவிமடுத்தல் மஹிந்த ராஜபக்சவையே பிரதமர் வேட்பாளராக பெயரிட வேண்டும் என டி.எம். ஜயரட்ன தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum