Top posting users this month
No user |
ஐரோப்பிய ஒன்றியம் விதித்திருந்த மீன் ஏற்றுமதி தடை விரைவில் நீக்கம்
Page 1 of 1

இலங்கையில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் மீன்களுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தினால் விதிக்கப்பட்டிருந்த தடை விரைவில் நீக்கப்படவுள்ளது.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
2014ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இலங்கையில் மீன் உற்பத்தி ஏற்றுமதி தடையை நீக்கி “சிவப்பு அட்டை “ வழங்கப்பட்டது.
இதனால் மீன் உற்பத்திகளின் தடையை ஐரோப்பிய சங்கம் தொடர்ந்தும் மேற்கொண்டமையினால் விற்பனை சந்தையில் இலங்கைக்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
எனவே கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்துக்கு இலங்கையின் நீர்ப்பரப்பில் கடற்றொழில் முகாமைத்துவ நடவடிக்கைக்கு மேலதிகமாக, ஆழ்கடலில் கடற்றொழில் நடவடிக்கை தொடர்பாக சகல பாதுகாப்பு மற்றும் முகாமைத்துவத்தின் வழிமுறைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.
ஐரோப்பிய ஆணைக்குழுவின் மீன் ஏற்றுமதிக்காக விதிக்கப்பட்ட மீன் ஏற்றுமதிக்கான தடையை இரத்து செய்வதற்கான செயற்றிட்டம் ஒன்றை நிறுவுவதற்கும்,
சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கும் பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்கும், அவர்களுக்கு போதியளவு பயிற்சியை அளிப்பதற்கும் தேவையான நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த நடவடிக்கைகளை செவ்வனே நிறைவேற்றுவதற்காக கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தினை வலுவாக்க கடற்றொழில் மற்றும் நீரிளல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum