Top posting users this month
No user |
நாடு வங்குரோத்து நிலையை அடைந்துள்ளது: மஹிந்த குற்றச்சாட்டு
Page 1 of 1

நாடு இன்று வரையில் வங்குரோத்து நிலையை அடைந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அம்பாறை பிரதேச விகாரையில் இடம் பெற்ற மதவழிபாடுகளில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய அரசாங்க அமைச்சர்கள் தங்கள் உண்மையான பொறுப்புக்களை புரிந்துக்கொண்டதில்லை.
எங்களுக்கு நட்டம் ஏற்பட்டுள்ளது. அதனால் பெற்றோலின் விலையை 17.50 ரூபாவினால் அதிகரிக்க வேண்டும் என ஒரு அமைச்சர் கூறுகிறார். இன்னுமொரு அமைச்சர் கூறுகிறார் இல்லை, இல்லை இப்போதே அதிகரிக்க முடியாது யார் கூறியது நட்டம் ஏற்பட்டுள்ளதென்று நான் தான் விலை அதிகரிக்க வேண்டும் என்கிறார்.
இதன் போது இன்னும் ஒரு அமைச்சர் கூறுகிறார் நீங்கள் யாரும் அதிகரிக்க முடியாது நான் தான் அதிகரிக்க வேண்டும் என்று தற்போதைய அமைச்சர்களுக்கு தங்கள் பொறுப்பு என்னவென்றே தெரியவில்லை.
தற்போது அரசாங்கத்தில் சம்பளம் வழங்குவதற்கேனும் பணம் இல்லை என்று கூறுகின்றார்கள்.
நான் கடந்த ஜனவரி மாதம் 08ஆம் திகதி வரை வரவு செலவு அறிக்கை ஒன்றை தயார் செய்திருந்தேன்.
அதில் வருமானங்களை எவ்வாறு பெற்றுக்கொள்ள முடியும், அதனை எவ்விதத்தில் செலவு செய்வதென்று, செலவு செய்ததற்கான படிமுறை போன்றவைக்கு அமைச்சரவைக்கு பணம் ஒதுக்கினோம். நான் இன்று பதியதலாவை ஊடாக வந்தேன் பாதை அரை பகுதி மாத்திரமே காணப்படுகின்றது.
குறித்த பாதையினை முழுமையாக புனரமைக்கவில்லை, ஏன் பாதியில் இப்பாதை புனரமைப்பு பணிகள் ஏன் இடை நிறுத்தப்பட்டுள்ளதென வினவினால் பணம் இல்லை என்கின்றார்கள் பணம் எவ்வாறு இல்லாமல் போகும். நாங்கள் பணத்தை வைத்து விட்டே வந்தோம் தற்போது அவை எங்கே?
இதேவேளை இந்த ஆட்சியை மாற்றி, நாட்டில் மூன்று இன மக்களும் மகிழ்ச்சியாக வாழும் ஆட்சி மாற்றமொன்றை விரைவில் உருவாக்குவேன்.
நாட்டில் ஏற்பட்டிருந்த தீவிரவாத காலத்தின் போது மதத்தலைவர்கள், கல்வியலாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலதரப்பினர் கொல்லப்பட்ட சம்பவத்தை எண்ணிப்பாருங்கள்.
அவ்வாறான தீவிரவாத யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தவன் நான். நமது நாட்டில் சுபீட்சம் ஏற்படக் காரணமாக இருந்தவனும் நான்.
எனது தலைமையிலான அரசாங்கம் மேற்கொண்ட நல்ல திட்டங்களையும் பணிகளையும் ஒரு போதும் மக்கள் மறந்திருக்கமாட்டார்கள் என்று எண்ணுகின்றேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum