Top posting users this month
No user |
காரில் இருந்து கண்ணடித்த பாதுகாப்பு அதிகாரி: காரை அடித்து நொறுக்கிய இளம்பெண்
Page 1 of 1

உத்தரப்பிரதேசத்தில் கட்சி தலைவரின் பாதுகாப்பு அதிகாரி ஈவ்டீசிங் செய்ததால் ஆத்திரமடைந்த இளம்பெண் ஒருவர், அவர் அமர்ந்திருந்த காரை அடித்து நொறுக்கியுள்ளார்.
உத்தரப் பிரதேசம் ஆக்ராவைச் சேர்ந்த இளம்பெண் சாத்வி பாண்டே. தனது சகோதரியுடன் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த போது, அந்த வழியாக சமாஜ்வாதி உள்ளூர் தலைவர் அபினவ் சர்மாவும் காரில் சென்றுள்ளார்.
அவரது பாதுகாப்புக்காக காரில் உடன் வந்த இளைஞர் ஒருவர், காரில் இருந்தபடியே சாத்வி பாண்டேவை பார்த்து கண்ணடித்துள்ளார்.
அதை தட்டிக் கேட்ட பாண்டேவின் சகோதரி தனது கைப்பேசியில் புகைப்படம் எடுத்துள்ளார்.
இதையடுத்து உடனடியாக காரில் இருந்து இறங்கிய பாதுகாவலர், கைப்பேசியை பறித்து உடைத்து எறிந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சாத்வி பாண்டே, சமாஜ்வாதி தலைவர் அபினவ் சர்மாவின் காரை வழிமறித்து நியாயம் கேட்டபோது, அவர் ஒருதலைப்பட்சமாக பேசியதாகக் கூறப்படுகிறது.
எனவே பாண்டே, கார் மீது ஏறி கண்ணாடியை உடைத்ததோடு, சுமார் ஒரு மணி நேரம் காரின் முன்பக்க பேனட்டில் நின்றபடி சண்டையிட்டுள்ளார்.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பொலிஸார் இருதரப்பினரையும் சமாதானம் செய்துள்ளனர்.
இறுதியில் உடைந்த கைப்பேசிக்கான தொகையை அளித்த அபினவ் சர்மா, பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார்.
இதுகுறித்து பாண்டே கூறுகையில், என்னிடமும் எனது சகோதரியிடமும் சமாஜ்வாதி கட்சியினர் அநாகரிகமாக நடந்து கொண்டனர், அதனால் தான் நியாயம் கேட்டு சண்டையிட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
சமாஜ்வாதி கட்சியின் செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா கூறுகையில், அபினவ் சர்மா எங்கள் கட்சியின் உறுப்பினர் கிடையாது, அவர் தனது காரில் சமாஜ்வாதி கொடியைப் பயன்படுத்தியது தவறு, இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், காரில் ஏறி நின்று சாத்வி பாண்டே ஆவேசமாக சண்டையிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வேகமாகப் பரவி வருகிறது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum