Top posting users this month
No user |
Similar topics
கெஹலிய ரம்புக்வெல பிணையில் விடுதலை
Page 1 of 1
கெஹலிய ரம்புக்வெல பிணையில் விடுதலை
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் 990000 ரூபாய் பணத்தை முறைக்கேடு செய்து ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்திற்கு செலவு செய்த முன்னாள் ஊடகதுறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல உள்ளிட்ட மூவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்திற்காக இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் நிதியை பயன்படுத்தி அரசுக்கு நஸ்டம் ஏற்படுத்தியதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, ரூபவாஹினி கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் விமல் ரூபசிங்க, முன்னாள் பணிப்பாளர் சந்திரபால லியனகே ஆகியோருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
நான்கு குற்றச்சாட்டுக்களின் கீழ் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு 24 சாட்சியாளர்கள், 15 ஆவணங்கள் கொண்டு குறித்த மூவருக்கும் எதிராக வழக்கு தொடர்ந்தது.
எனினும் கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய 50,000 ரூபா ரொக்கப் பிணையிலும் 25 இலட்சம் பெறுமதியான 2 சரீரப் பிணைகளிலும் இவர்கள் மூவரையும் விடுவிக்க உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை கெஹலிய ரம்புக்வெல்ல அவுஸ்திரேலியா சென்று சிகிச்சை பெறவேண்டியுள்ளதால், அவருடைய கடவு சீட்டு விடுவிக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய இருவரினது கடவுச்சீட்டையும் முடக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு செப்டெம்பர் 2ஆம் திகதி மீண்டும் விசாரணைகளுக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» டீ.வீ. உபுல் பிணையில் விடுதலை
» ஜெயக்குமாரி நிபந்தனையுடன் பிணையில் விடுதலை
» சஜின்வாஸ் குணவர்த்தன பிணையில் விடுதலை
» ஜெயக்குமாரி நிபந்தனையுடன் பிணையில் விடுதலை
» சஜின்வாஸ் குணவர்த்தன பிணையில் விடுதலை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum