Top posting users this month
No user |
தமிழகத்தின் ஒரே பெண் லொறி ஓட்டுனரின் தன்னம்பிக்கை பயணம்
Page 1 of 1

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஜோதிமணி என்ற 30 வயது பெண்மணி தமிழகத்தின் ஒரே பெண் லொறி ஓட்டுனர் என்ற பெருமையுடன் விளங்குகிறார்.
ஈரோடு மாவட்டம், கள்ளிப்பட்டியை சேர்ந்த ஜோதிமணி, என்ற பெண்மணி கடந்த 2009ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டன்று, தனது கணவருக்கு சொந்தமான லொறியை முதன்முதலில் ஓட்ட பயிற்சி எடுத்துள்ளார்.
இரு குழந்தைகளுக்கு தாயான அவருக்கு லொறி ஓட்டுவதில் ஆர்வம் ஏற்பட்டதை பார்த்த அவரது கணவர், அவ்வப்போது லொறி ஓட்டக்கற்றுக் கொடுத்து வந்துள்ளார்.
தனது பயணம் குறித்த அனுபவங்கள் பற்றி ஜோதிமணி கூறுகையில், ஒரு சமயம் எங்கள் லொறியில் ஓட்டுனராக வேலை செய்து கொண்டிருந்த நபர் சில நாட்கள் வேலைக்கு வராமல் இருந்தார்.
இதனால் நாங்கள் பெருத்த நஷ்டத்துக்கு உள்ளானதை அடுத்து, எனது கணவருடன் சேர்ந்து நானும் லொறி ஓட்ட முடிவு செய்தேன்.
முதன்முதலில் கடந்த 2009ம் ஆண்டு மத்தியில் எனது கணவருடன் சேர்ந்து ஐதராபாத்துக்கு லொறி ஓட்டிச்சென்றேன்.
ஒரு சில நேரங்களில் இரண்டு வாரங்கள் முதல் ஒரு மாதம் வரை கூட தொடர்ந்து லொறியை இயக்கியுள்ளேன்.
தற்போது குஜராத் மாநிலத்தின் பல பகுதிகளுக்கும் ஆயத்த ஆடைகளை தனியாகவே ஏற்றிச்செல்கிறேன்.
அங்கிருந்து திரும்பும்போது பருத்தி, மரம் மற்றும் இயந்திர பாகங்களை தமிழகத்திற்கு பாரம் ஏற்றிவருவேன்.
ஏறத்தாழ ஐந்து வருட கால பயண அனுபவங்களில் நான் ஒரே ஒரு முறை மட்டும் விபத்தை சந்தித்துள்ளேன்.
கடந்த 2012ம் ஆண்டு லொறியின் பிரேக் செயலிழந்ததால், மற்றொரு லொறியுடன் மோதிய விபத்தில், அதிஷ்டவசமாக நான் உயிர் தப்பினேன் என்று தெரிவித்துள்ளார்.
ஜோதிமணியின் கணவர் கவுதமன் கூறுகையில், லொறி ஓட்டுனரான என்னால் தொடர்ந்து இந்த பணியை செய்ய முடியுமா என்ற நிலையை மாற்றி எனக்கு தைரிய மூட்டியவர் என் மனைவி ஜோதிமணி.
அவரது மன தைரியத்தால் மற்றொரு லொறியை வாங்கினேன் என்னுடன் வேலைக்கு வந்து எனக்கு உதவியாக இருந்த அவர் பிறகு தனியாகவே ஒரு லொறியை ஓட்டி செல்லும் அளவுக்கு துணிச்சலான பெண்ணாக மாறி விட்டார் என்று தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum