Top posting users this month
No user |
கைதியுடன் சேர்ந்து சினிமாவுக்கு சென்ற காவல்துறை ஆய்வாளர்: 4 பேர் சஸ்பெண்ட்
Page 1 of 1

விழுப்புரத்தில் கைதியுடன் சேர்ந்து சினிமாவுக்கு சென்ற சிறப்பு காவல் உதவி ஆய்வாளர், தலைமை காவலர் உள்ளிட்ட மூன்று பேரை சஸ்பெண்ட் செய்துள்ளனர்.
விழுப்புரம் நகரில் உள்ள ஒரு சினிமா தியேட்டரில் கடந்த சனிக்கிழமை இரவு காட்சிக்கு 4 பொலிசார், கைதி ஒருவரை கைவிலங்கிட்டு அழைத்து சென்றுள்ளனர்.
பொலிஸ் ஜீப்பிலேயே தியேட்டருக்கு சென்ற அவர்கள், படம் தொடங்கி அரைமணி நேரமாகியிருந்த நிலையில் உள்ளே நுழைந்துள்ளனர்.
பின்னர் 4 பொலிசாரும், கைவிலங்கிடப்பட்ட கைதியுடன் அமர்ந்து சினிமா பார்க்க தொடங்கியுள்ளனர்.
அவர்களில் காவல்துறை ஆய்வாளர் மட்டும் சீருடையில் இருந்த நிலையில், மற்றவர்கள் சாதாரண உடையில் இருந்துள்ளனர்.
இதனால், சிறிது நேரம் தியேட்டரில் இருந்த மக்களிடம் சலசலப்பு நிலவியது.
முழுப் படத்தையும் கைதியுடன் அமர்ந்து பார்த்துவிட்டு சென்ற பொலிசார் அனைவரும் விழுப்புரம் டவுன் காவல் நிலையத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.
இரவு ரோந்து பணிக்கு சென்ற அவர்கள், அந்த பணியை செய்யாமல் கைதியுடன் தியேட்டருக்கு சென்று சினிமா பார்த்துள்ளனர்.
இந்நிலையில், கைதியை கைவிலங்குடன் தியேட்டருக்கு அழைத்து சென்று சினிமா பார்த்த சம்பவம் தொடர்பாக, சிறப்பு காவல் உதவி ஆய்வாளர், தலைமை காவலர் உள்பட மூன்று பேரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நரேந்திரன் நாயர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum