Top posting users this month
No user |
இன்றிரவென்றாலும் பாராளுமன்றத்தை கலைக்க தயார்!- ஜனாதிபதி
Page 1 of 1

20வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றாமல் பாராளுமன்றத்தை கலைக்குமாறு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் குழு அறிவித்தால் இன்றிரவென்றாலும் பாராளுமன்றத்தை கலைக்கப்பதற்கு நான் தயார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து உரையாடும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
உடனடியாக பாராளுமன்றத்தை கலைக்குமாறு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜயரத்ன ஹேரத் உள்ளிட்ட சிலர் இவ்வாறு கருத்து தெரிவித்த சந்தர்ப்பத்தின் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.
எப்படியிருப்பினும், 20வது திருத்துச் சட்டத்தை நிறைவேற்றும் வரை பாராளுமன்றத்தைக் கலைக்க வேண்டாம் எனவும் கட்சியில் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதேவேளை, 20வது திருத்தச் சட்டம் குறித்து சிறிய கட்சிகள் இன்னமும் தெளிவான இணக்கப்பாட்டிற்கு வரவில்லை என பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலையில் இவ்வாரத்தில் 20ம் அரசியலமைப்பு திருத்தச்சட்ட மூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
20ம் அரசியலமைப்பு திருத்தச்சட்ட மூலம் தொடர்பில் தற்போது பல்வேறு கருத்துகள் எழுந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
எனவே குறித்த திருத்தச் சட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடியுமா என்பது குறித்து தனக்குத் தெரியாது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum