Top posting users this month
No user |
சிவபெருமான் சுந்தரரிடம் நிகழ்த்திய விளையாட்டு
Page 1 of 1

சுந்தரமூர்த்தி நாயனாருக்கு, பூவுலக நண்பராக இருந்தவர் சேரமான் பெருமான் என்னும் சேர மன்னன் ஆவான். ஒரு முறை தன்னுடைய நண்பர் சேரமான் பெருமானை சந்தித்து பேசிவிட்டு, பொன்னும், பொருளும் பெற்றுக்கொண்டு, திருமுருகன் பூண்டி திருத்தலத்தின் வழியாக சுந்தரமூர்த்தி நாயனார் திரும்பிக் கொண்டிருந்தார்.
அவிநாசியில் உள்ள அவிநாசியப்பரை தரிசிக்கும் நோக்கில் சென்றார் சுந்தரர். ஆனால் இந்த திருத்தலத்தின் அருகே வந்தபோது, இருள் சூழ்ந்த நேரம் ஆகிவிட்டது. ஆகவே அவிநாசி செல்லும் வழியில் சுமார் 1 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பாறை மீது இருக்கும் விநாயகர் கோவிலில் தங்கினார்.
எப்போதும் தன்தோழர் சுந்தரரோடு விளையாடுவதையே வாடிக்கையாகக் கொண்ட முக்கண் பரமன், தனது பூத கணங்களை வேடுவர் வடிவில் அனுப்பி, அவரிடமிருந்த பொருட்களை களவாடச் செய்தார்.
இது யார் செய்த வேலையாக இருக்கும் என்று தெரியாமல் திகைத்தார் சுந்தரர். பின்னர் விநாயகரிடம், ‘நீ தான் வழிகாட்ட வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுக்க, அவர் தன் தந்தையின் திருவிளையாடல் தான் என்பதனை அருட்குறிப்பால் உணர்ந்து, சுந்தரருக்கு உதவும் வகையில், கிழக்குத் திசை நோக்கிக் கைகாட்டினார்.
இதனால் அந்த விநாயகருக்கு ‘கூப்பிடு விநாயகர்’ என்று பெயர். சுந்தரர் நடந்து வந்து அங்கே பார்த்த போது, இந்தத் திருத்தலத்தில் உள்ள சிவலிங்கத்தைக் கண்டார். ஈசன் தான் தன்னோடு விளையாடுகிறார் என்பதை சுந்தரர் புரிந்து கொண்டார்.
இதற்கு முன்பாக திருஈங்கோய் மலைக்குச் சென்ற போது, அங்கே பொன்னால் ஆன புளியங்காய்களைக் காட்டி விட்டு மறைத்ததும், திருநாட்டியத்தான் குடிக்குச் சென்றபோது கோவிலில் இல்லாது வெளியே நாற்று நட்டுக் கொண்டிருந்தது போன்ற பல திருவிளையாடல்களை சிவபெருமான் செய்ததும் அவருக்கு நினைவு வந்தது.
சிவன் தன்னோடு செய்தது சுந்தரருக்கு நினைவுக்கு வந்தது. இதையடுத்து சிவபெருமானை உரிமையுடன் கோபித்தது போல, பத்து பாமாலை அவரது திருவாயில் இருந்து வெளிவந்தது. அந்தப் பாடல்களைக் கேட்டு பரவம் அடைந்த பரமன், தான் கவர்ந்து வந்த பொன்னையும், பொருளையும் சுந்தரருக்கு திரும்ப அளித்து பேரருள் பொழிந்தார்.
இந்த நிகழ்வை குறிக்கும் வகையில், இவ்வாலயத்தின் நுழைவு வாசலின் வலது புறம் மூன்று சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. நிதியைப் பறிகொடுத்த சுந்தரர் வாடிய முகத்துடன் நிற்பது போன்று ஒரு சிலையும், மற்றொன்று இழந்த பொருளை மீண்டும் பெற்று மகிழ்ந்த முகத்துடனும், மூன்றாவது இயல்பு நிலையிலும் இருக்கிறது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum