Top posting users this month
No user |
துபாயில் வீற்றிருக்கும் சிவாலயம்
Page 1 of 1
துபாயில் வீற்றிருக்கும் சிவாலயம்
உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிபா உள்ளிட்ட அழகழகாய், மிகவும் நெருக்கமாக விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வண்ண வண்ண கட்டிடங்கள் கூட்டணி அமைத்துக் கொலுவிருக்கும் அழகிய நகரம் துபாய்.
ஆங்காங்கே ஒருசில பேரீச்ச மரங்களும், மலை வேம்பு மரங்களும் தவிர மொத்தமாக கடலும், உப்பங்கழிகளும், மணலும் சூழ்ந்த பாலைவனப்பகுதி. மீனா பஜார் என்று பெயர் பெற்ற கடைவீதி – அங்கே வரிசையாக துணிக்கடைகள். அனைத்தும் வட இந்தியர்களால் குறிப்பாக குஜராத் பெருமக்கள் வணிகம் செய்யும் பகுதி.
அதன் வழியே சென்றால் ஓரிடத்தில் ஒரு சிறிய திருப்பத்தில் உள்ளது ஒரு கட்டிடம் கீழே சின்னச்சின்ன கடைகள். அங்கு பூஜைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அருகே பக்தர்கள் செருப்பு வைக்கும் கூடம். குடிப்பதற்கு குளிர்ந்த நீர் குழாய்கள்.
வட இந்திய பாணியில் மஞ்சள் செண்டிப்பூ, இனிப்புப் பலகாரங்கள், குங்குமம் கொண்ட பூஜைத் தட்டுகளை ஏந்திய வண்ணம் மாடிப்படிகளில் ஏறிச் சென்று கொண்டிருந்த பக்தர்களுடன் நாமும் மேலே சென்றோம். ஷீரடி சாய்பாபா வெண் பளிங்குச்சிலை. பாபா கால் மேல் கால் போட்டுக் கொண்டு, ஆலயத்திற்குள் வரும் பக்தர்கள் அனைவரையும் ஆசீர்வாதம் செய்து கொண்டிருப்பது போன்ற காட்சி அற்புதமானது.
பின்புறத்தில் அவரது வாழ்க்கை வரலாற்றுப் படங்கள் சித்திரங்களாகக் காட்சியளித்தன. ‘குரு தர்பார்’ என்ற பெயர் கொண்ட குருநானக் சன்னிதியில் இளைஞர்களும், பெண்களும் வணங்கிக் கொண்டிருந்தனர். பலர் எதிரே அமர்ந்து கண்மூடி தியானம் செய்து கொண்டிருந்தனர்.
மற்றொரு சன்னதியில் அபிஷேகப் பிரியரான சிவபெருமான் இங்கே அலங்காரப் பிரியராக, மலர்களாலும், நகைகளாலும் அணி செய்யப்பட்டு சிவலிங்க வடிவில் காட்சி தருகிறார். எதிரே நந்திதேவர் கால்களை மடக்கி அமர்ந்த நிலையில் அமர்ந்திருக்கிறார். சிவலிங்கத்தின் அருகே வீற்றிருக்கும் அம்பிகை அலங்கார நாயகியின் சிலையானது, ஐம்பொன்னால் ஆனது.
சிவலிங்கத்தின் பின்புறம் விநாயகர், முருகப்பெருமான் ஆகியோரது பஞ்சலோக சிலைகள் உள்ளன. சிவபெருமானையும், இதர பிற தெய்வங்களையும் தரிசனம் செய்து விட்டு வெளியே வந்தால், பெரிய கிருஷ்ணர் சன்னதி ஒன்று உள்ளது. முழுவதும் குளிரூட்டப்பட்ட இந்த சன்னதியின் சுவரை வெங்கடாசலபதி, கிருஷ்ணர் மற்றும் சாதுக்கள் பலரின் படங்கள் அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன.
கூடத்தின் மேடையில் இசைக்கருவிகளுடன் பஜனைப் பாடல்கள் எப்போதும் இசைக்கப்பட்ட வண்ணம் இருக்கிறது. இதன் காரணமாக அந்த இடத்தில் ஒருவித அமைதியான நிலை காணப்படுகிறது. இந்த ஆலயத்தை தரிசனம் செய்வதற்காக, தமிழர்களும், தென்னிந்தியர்களும், வட இந்தியர்களும் வருகை தந்த வண்ணம் இருக்கின்றனர்.
கோவிலுக்கு வந்தவர்கள் வெறும் வயிற்றுடன் செல்லக்கூடாது என்பதற்காக, இந்திய வகை பலகாரங்கள் பிரசாதமாக கொடுக்கப்படுகிறது. கோவில் பற்றி விவரங்களை எடுத்துரைக்கும் வகையிலான தகவல் பலகைகள், தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வைக்கப்பட்டிருக்கின்றன.
இதனால் மக்கள் குழப்பம் அடையத் தேவையில்லை. எதையும் தெளிவாக தெரிந்து கொள்ளலாம். இஸ்லாமிய மண்ணில் இந்து வழிபாடு, சமய நல்லிணக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகவே எண்ண வேண்டும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum