Top posting users this month
No user |
விவசாயிகளுக்காக பாதயாத்திரை.. அரசியல் ஆதாயம் தேடும் ராகுல்காந்தி: வெங்கய்ய நாயுடு குற்றச்சாட்டு
Page 1 of 1

ராகுல்காந்தி விவசாயிகளுக்கு ஆதரவாக பாதயாத்திரை மேற்கொள்வது அரசியல் ஆதாயத்திற்காக தான் என்று மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு குற்றம் சாட்டியுள்ளார்.
ஆந்திர மாநிலம் குண்டூரில் பாஜ கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில் கலந்து கொண்ட வெங்கய்ய நாயுடு பேசுகையில், கடந்த 10 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் சுமார் 2 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.
அப்போது ராகுல் காந்தி எங்கு சென்றார்? ஆனால் தற்போது இவர் விவசாயிகளுக்கு ஆதரவாக பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். இது அரசியல் ஆதாயத்திற்காக நடத்தப்படும் பாதயாத்திரை.
தோல்வியை ஜீரணிக்க முடியாமல் தான் ராகுல்காந்தியும், காங்கிரஸாரும் இப்படி எல்லாம் நடந்து கொள்கின்றனர். இதனை மக்கள் நம்புவார்களா?
50 ஆண்டுகளுக்கும் மேலாக தூங்கி கொண்டிருந்த காங்கிரஸ் கட்சி, தற்போது திடீரென தூங்கி எழுந்தது போல் பேசி வருவது வேடிக்கையாக உள்ளது.
ஆந்திர மாநில பிரிவினை நடைபெறும் போது, சிறப்பு அந்தஸ்து குறித்து எந்தவித வாக்குறுதியும் கொடுக்காமல் காங்கிரஸ் நழுவ முயற்சித்தது. ஆனால் பாஜக அரசு சிறப்பு அந்தஸ்து வழங்க முயற்சி செய்து வருகிறது
நில மசோதாவை அவசர அவசரமாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியதாக எதிர்கட்சிகள் கூறுவது சரியல்ல.
மசோதா நிறைவேற்றுவதற்கு முன்னதாகவே இதுகுறித்து விவாதம் நடத்தி உள்ளோம் என்று கூறியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum