Top posting users this month
No user |
மயானத்தில் பாதி எரிந்த நிலையில் கிடந்த சடலத்தால் பரபரப்பு: நர பலியா?
Page 1 of 1

சிவகங்கை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள நகராட்சி வடக்கு மயானத்தில் பாதி எரிந்த நிலையில் சடலம் ஒன்று கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எஸ்.பி. அலுவலகம் அருகே நகராட்சி வடக்கு மயானம் உள்ளது.
இந்த மயானத்தில் எரியூட்டும் ஊழியராக உள்ள சுப்பையா (55) நேற்று காலை மயானத்துக்கு சென்றபோது, அங்கு ஒரு உடல் எரிந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
அந்த சடலத்தில், முகம் மற்றும் உடல் முழுவதும் எரிந்து எலும்புக்கூடாக இருந்தது, ஒரு கை மட்டும் எரியாமல் இருந்துள்ளது.
இதையடுத்து சுப்பையா, இதுகுறித்து சிவகங்கை டவுன் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.
பின்னர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்திய பொலிசார், எரிந்த உடல் அருகே ஒரு எலுமிச்சம் பழமும், அதில் 40க்கும் மேற்பட்ட குண்டூசிகள் குத்தப்பட்டிருந்ததையும் கண்டுபிடித்துள்ளனர்.
அது மட்டுமல்லாமல், 4 திசைகளிலும் நாட்டுக்கோழி முட்டையில் குங்குமம் தடவி வீசி எறியப்பட்டிருந்தது.
எனவே இது நரபலியாக இருக்கலாமா அல்லது எங்காவது கொலை செய்து, உடலை மயானத்தில் எரித்துள்ளார்களா எனவும் சந்தேகம் எழுந்துள்ளது.
மயானத்திற்கு 4 சக்கர வாகனம் வந்து சென்ற அடையாளமும் இருந்தால் சந்தேகம் வலுக்கிறது.
மேலும், எரிக்கப்பட்ட உடல் ஆணா, பெண்ணா என்பது தடயவியல் சோதனைக்கு பின்னரே தெரிய வரும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum