Top posting users this month
No user |
Similar topics
200 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை பணியாளர்களுக்கு அளித்த 26 வயது நிறுவனர்
Page 1 of 1

தனியார் நிறுவனம் ஒன்றின் நிறுவனர்களில் ஒருவரான ராகுல் யாதவ் என்பவர், தன்னுடைய அனைத்து பங்குகளையும் நிறுவன ஊழியர்களுக்கு அளித்துள்ளார்.
ரியல் எஸ்டேட் இணைய தளங்களில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு முன்னேறி வரும் ஆன்லைன் நிறுவனங்களில் ஹவுசிங்.காம் நிறுவனம் முக்கியமானதாகும்.
ஹவுசிங்.காம் நிறுவனம் 2012-ம் ஆண்டு மும்பை ஐஐடி-யைச் சேர்ந்த 12 நண்பர்கள் குழுவால் தொடங்கப்பட்டது.
வீடு வாடகைக்கு விடுவது, விற்பது, வாங்குவதற்கு வசதியாக இந்த தளம் செயல்பட்டு வருகிறது.
ராகுல் யாதவ் ஹவுசிங்.காம் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவராகவும், நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியுமாக செயல்பட்டு வருகிறார்.
இந்நிறுவனத்தில் இவருக்கு 4.5 சதவீத பங்குகள் உள்ளன. இவற்றின் மதிப்பு ரூ. 150 கோடி முதல் ரூ. 200 கோடியாகும்.
இந்நிலையில் இவர் தற்போது அதிரடி முடிவொன்றை எடுத்துள்ளார். அதாவது, அவர் தன் பங்குகளை நிறுவனத்தில் பணியாற்றும் 2,251 ஊழியர்களும் பகிர்ந்து கொள்ளலாம் என அறிவித்துள்ளார்.
இது தொடர்பான அறிவிப்பை நிறுவன ஊழியர்கள் பங்கேற்ற கூட்டத்தில் யாதவ் நேற்று முன் தினம் வெளியிட்டுள்ளார்.
இந்த அதிரடி முடிவால் நிறுவனத்தில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் நிறுவன பங்குதாரர்கள் ஆகியுள்ளதால் ஊழியர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அப்போது ராகுல் கூறுகையில், தற்போது தனக்கு 26 வயதே ஆகும் நிலையில் இவ்வளவு சிறிய வயதில் இத்தகைய தொகை தனக்கு தேவைப்படாது என்பதால் ஊழியர்களுக்கு பகிர்ந்தளிக்க முடிவு செய்தேன் என்று தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் ஜனாதிபதியின் சகோதரர்
» ’தூய்மை இந்தியா’ திட்டம்: உலக வங்கி 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி
» முதலீட்டாளர்களுக்கு 7 லட்சம் கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்திய பங்குச் சந்தை வீழ்ச்சி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum