Top posting users this month
No user |
தனித்தொகுதிகள், பல்-அங்கத்தவர் தொகுதிகள் அமைக்க அமைச்சரவை உபகுழு இணக்கம்!- மனோ கணேசன்
Page 1 of 1

தேர்தல் முறை மாற்றம் தொடர்பிலான அமைச்சரவை உபகுழு கூட்டத்தில் தொகுதி மீள் நிர்ணயம் மூலமாக சிறுபான்மையினருக்கு புதிய தனித்தொகுதிகள் மற்றும் பல்-அங்கத்தவர் தொகுதிகள் உருவாக்கப்படுவது உட்பட நம்பிக்கையளிக்கும் பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டன என மனோ கணேசன் தெரிவித்தார்.
தேர்தல் முறை மாற்றத்துக்கான 20ம் திருத்த நகல் சட்டமூலம் தொடர்பில் அரசியல் கட்சிகள் வழங்கியுள்ள யோசனைகளை ஆராய்ந்து அமைச்சரவைக்கு சிபார்சுகளை முன்வைக்கும் முகமாக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழு தனது முதற்கூட்டத்தை நேற்றிரவு 8 மணி முதல் ஜனாதிபதி செயலகத்தில் நடத்தியது.
இந்த கூட்டத்தில் உபகுழு தவிசாளர் அமைச்சர் சரத் அமுனுகம, அங்கத்தவர்களான அமைச்சர்கள் சம்பிக்க ரணவக்க, லக்ஷ்மன் கிரியெல்ல, எஸ்.பி. திசாநாயக்க, கயந்த கருணாதிலக்க, கபீர் ஹஷீம், ரவுப் ஹக்கீம் ஆகியோருடன் ஜமமு தலைவர் மனோ கணேசனும் கலந்துகொண்டார்.
உபகுழு உறுப்பினரான அமைச்சர் பழனி திகாம்பரம் வெளிநாடு சென்றுள்ள காரணத்தால், திகாம்பரத்தின் கோரிக்கையின்படி, அவருக்கு பதிலாக மனோ கணேசனை கலந்துகொள்ளும்படி அமைச்சரவை தீர்மானத்திருந்தது. இது தொடர்பில் மனோ கணேசன் ஊடகங்களிடம் கூறியதாவது,
நேற்றைய கூட்டம் திருப்திகரமானது. 20ம் திருத்த நகல் சட்டமூல யோசனைகளை கடந்த சில வாரங்களாகவே நாம் கலந்துரையாடி நமது எதிர்பார்ப்புகளை அதில் உள்நுழைத்துள்ளோம்.
இதில் மலையகம் மற்றும் மேல்மாகாணம் உட்பட பிரதான தென்னிலங்கை மாகாணங்களில் வாழும் தமிழ் மக்கள் தொடர்பில் புதிய தனித்தொகுதிகள் மற்றும் பல் அங்கத்தவர் தொகுதிகள் உருவாக்கப்பட வழிசமைக்கும் தொகுதி மீள் நிர்ணயமே மிகவும் அவதானத்துடன் கண்காணிக்கப்பட வேண்டியது ஆகும்.
இன்றைய 160 தொகுதிகளுக்கு மேலதிகமாக புதிய தனித்தொகுதிகளையும், பல்-அங்கத்தவர் தொகுதிகளையும் உருவாக்கும் நமது வலியுறுத்தல்களை பலத்த கலந்துரையாடல்களுக்கு பின்னர் அமைச்சரவை உபகுழு ஏகமனதாக ஏற்றுக்கொண்டுள்ளது.
அதேபோல், மீள் நிர்ணய ஆணையத்தில் சிபாரிசு செய்யப்பட்டுள்ள ஐந்து உறுப்பினர்களுக்கு மேலதிகமாக இன்னும் நான்கு கண்காணிப்பளர்களை நியமிக்கவும் உடன்பாடு காணப்பட்டது. இது தொடர்பில் நாம் முன்வைத்த யோசனை பலத்த வாதப்பிரதிவாதங்களுக்கு பின்னர் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ஆணைகுழுவில், தொகுதி மீள் நிர்ணயங்கள் ஆராயப்பட்டு தீர்மானிக்கப்படும் போது, இக்கண்காணிப்பாளர்கள் தென்னிலங்கை மலையக தமிழ் சிறுபான்மை, முஸ்லிம், வடகிழக்கு தமிழர், வடகிழக்கு சிங்கள சிறுபான்மை ஆகிய பிரிவினரின் நலன்களை கண்காணிப்பார்கள்.
சிறுபான்மையினர் சார்பாக நாம் முன்வைத்த யோசனைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டமை குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த அமைச்சரவை உபகுழுவின் சிபாரிசுகள் மேலும் கலந்துரையாடப்பட்டு அடுத்த வாரம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும். அதன்பிறகு அது சட்டமூலத்தில் உள்வாங்கப்பட்டு அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டு பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum