Top posting users this month
No user |
ராஜிதவுக்கு சவால் விடுத்த நிஸ்ஸங்க
Page 1 of 1
ராஜிதவுக்கு சவால் விடுத்த நிஸ்ஸங்க
எவன்காட் சம்பவத்தை மூடி மறைக்க தான் யாருக்கும் பணம் வழங்கவில்லை எனவும், அவ்வாறான ஒரு சம்பவம் நடந்திருப்பின் அது தொடர்பில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு செய்யவும் என எவன்காட் நிறுவனத்தின் தலைவர் மேஜர் நிஸ்ஸங்க சேனாதிபதி தெரிவித்துள்ளார்.
அவன்ட் கார்ட் விவகாரம் குறித்து இருவாரங்களுக்கு மௌனித்து இருக்க 20 மில்லியன் ரூபாய்களை வழங்க முன்வந்தனர் என நேற்று அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்திருந்தார்.
அத்துடன் இலஞ்சம் வழங்க முன்வந்தவர்களில் தனது நண்பரும் கூட உள்ளடங்குகின்றார் என அமைச்சர் தெரிவித்தார்.
இது தொடர்பில் சிங்கள ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவித்த போதே நிஸ்ஸங்க சேனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் ராஜித சேனாரத்ன முன்வைத்த குற்றச்சாட்டை தான் முற்றிலும் நிராகரிப்பதாக எவன்காட் நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார்.
இதுமாதிரியான கீழ்த்தரமான வேலைகளை தான் ஒருபோதும் செய்வதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எந்தவொரு விசாரணைகளையும் மூடிமறைக்க வேண்டிய தேவை எனக்கு இல்லை.
இவ்வாறான ஒரு விடயம் நடந்திருப்பின் சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளலாம் என நிஸ்ஸங்க சேனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். ஸ
அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவிக்கும் நண்பருடைய தகவல்களை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு வழங்கலாம் எனவும், நாட்டில் சட்டம் என்று ஒன்று உண்டுதானே,
அதுமாத்திரமல்லாது அவரது குடும்ப பிரச்சினைகளுக்கு நான் மூக்கு நுழைக்க மாட்டேன் என எவன்காட் நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார்.
அவை எனக்கு தேவையில்லை, நான் குறித்த குற்றச்சாட்டுக்களை முற்றிலுமாக நிராகரிக்கரின்றேன் என அவர் மேலும் அவ் ஊடகத்திற்கு குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum