Top posting users this month
No user |
ஊடக சுதந்திரத்தை தோற்றுவித்த நல்லாட்சி: ரணில்
Page 1 of 1

ஊடகவியலாளர்கள் கொலைசெய்யப்பட்ட, காணாமல் போன யுகம் தற்போது இல்லாதொழிக்கப்பட்டுள்ளதுடன், ஊடகவியலாளர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள ஆணைக்குழுவொன்றினை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை மன்றத்தில் இடம்பெற்ற வெகுசன ஊடக சீர்திருத்தங்கள் பற்றிய தேசிய மாநாட்டின் இறுதி அமர்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இன்றைய நல்லாட்சியில் அரச ஊடகங்கள், தனியார் ஊடகங்கள், ஊடகவியலாளர்கள், நிறுவன உரிமையாளர்கள் போன்றோர் பாரிய பொறுப்பை சுமந்தவர்களாக காணப்படுகின்றனர்.
அவர்களின் பொறுப்பை சிறந்த முறையில் செயற்படுத்த தேவையான சகல வசதிகளை செய்து கொடுக்கவும், அவர்களுக்கு தேவையான பயிற்சியை வழங்கவும் பொறுப்புள்ள அரசாங்கம் எனும் வகையில் ஜனாதிபதி தலைமையில் நிதி வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று நான் “வெகுசன ஊடக அபிவிருத்திப் பற்றி மக்கள் அறிவிப்பு – 2015” என்ற பிரகடனத்தில் கைச்சாத்திட்டது வரலாற்று முக்கியத்துவமிக்க ஒரு தருணமாகும்.
நல்லாட்சியில் ஊடக கலாச்சாரத்தில் சீர்த்திருத்தம் ஒன்றை கொண்டு வருவதற்கான முதற்கட்டமாகத்தான் நான் இதை நோக்குகின்றேன்.
கடந்த காலங்களில் ஊடக அடக்கு முறையானது பல கோணங்களில் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்ததுடன், அவர்கள் சுதந்திரமாக செயற்ாட முடியாத நிலை காணப்பட்டது.
அதையும் மீறி அவர்கள் செயற்பட்டால் அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது.
இவ்வாறான அச்சுறுத்தல்களின் காரணமாக அவர்களை நாட்டைவிட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டது.
இதற்கு சிறந்த உதாரணமே சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க ஆவார்.
மேலும் அரச ஊடகங்களை விட தனியார் ஊடகங்கள் மோசமாக தாக்கப்பட்டன.
யாழ். உதயன் பத்திரிகை தீக்கிரையாக்கப்பட்டு அதன் பல பொருட்களுக்கும் சேதம் ஏற்பட்டது.
எனினும் இன்று அந்த கலாச்சாரம் இல்லை, நாட்டில் இன்று நல்லாட்சி நிலவுகின்றது.
ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக செயற்படக் கூடிய சூழ்நிலை இன்று நிலவுகின்றது.
ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் நோக்கில் தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு ஒன்றினை அமைக்க வேண்டும் என துறைசார்ந்தோரால் ஆலோசனை வழங்கப்பட்டது.
இது தொடர்பில் எனக்கு எழுத்து மூல ஆவணம் ஒன்றை பெற்றுத் தாருங்கள் அப்போது அதற்கு தேவையான நடவடிக்கைகளை நான் துரித கதியில் மேற்கொள்வேன் என பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum