Top posting users this month
No user |
Similar topics
புடலங்காய் பால்கூட்டு
Page 1 of 1
புடலங்காய் பால்கூட்டு
புடலங்காய் - 1 1/2 கப் (பொடியாக நறுக்கிய துண்டுகள்)
வேகவைத்த துவரம் பருப்பு - ஒரு கப்
மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி
கடுகு - கால் தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 3
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - தாளிக்க
உப்பு - தேவையான அளவு
அரைக்க:
தேங்காய்துருவல் - 2 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் - 5 அல்லது 6
சீரகம் - 3/4 தேக்கரண்டி
பால் - கால் கப் வரை
புடலங்காயை பொடியான துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். காய்ந்த மிளகாயை கிள்ளி வைக்கவும். தேங்காய், சீரகம் மற்றும் பச்சை மிளகாயை மிக்ஸியில் போட்டு சிறிதளவு பால் (தண்ணீருக்குப் பதில் பால்) சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தாளிக்க தேவையான அளவு எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு போட்டு பொரிந்ததும், காய்ந்த மிளகாய் போட்டு சில நொடிகள் வறுக்கவும். பிறகு இதனுடன் கறிவேப்பிலை சேர்த்து, கூடவே நறுக்கி வைத்த புடலங்காய், மஞ்சள்தூளை போட்டு வதக்கவும்.
காய் சில நிமிடங்கள் வதங்கியதும், ஒரு கப் அளவிற்கு தண்ணீரை ஊற்றவும். காய்க்கு தேவையான அளவு உப்பை சேர்க்கவும். இதனை ஒரு மூடிப்போட்டு சில நிமிடங்கள் காய் வேகும் வரை விடவும். பிறகு அதனுடன் அரைத்து வைத்த விழுதை சேர்க்கவும்.
அதன் பிறகு வெந்த பருப்பை மசித்து சேர்க்கவும். கூட்டு மிகவும் கெட்டியாக இருந்தால் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
உப்பு சரிப்பார்த்து, தேவைப்பட்டால் சிறிது சேர்த்து, எல்லாமாக சேர்த்து கொதிக்க விடவும். ஏற்கனவே காய் வெந்து இருப்பதால், ரொம்ப கொதிக்க வேண்டிய தேவை இருக்காது. இப்போது சுவையான புடலங்காய் பால் கூட்டு தயார்!

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum