Top posting users this month
No user |
நாட்டுக் கோழி கூட்டு
Page 1 of 1
நாட்டுக் கோழி கூட்டு
நாட்டுக் கோழி - அரை கிலோ
சின்ன வெங்காயம் (அ) பெரிய வெங்காயம் - 300 கிராம்
தக்காளி - 150 கிராம்
இஞ்சி, பூண்டு விழுது - அரை தேக்கரண்டி
தேங்காய்ப் பூ - அரை கப்
மல்லித் தூள் - ஒரு மேசைக்கரண்டி
நாட்டுக் கோழி மசாலா - 2 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
அரிசி பொரிமா - முக்கால் மேசைக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
தாளிக்க:
எண்ணெய் - தேவைக்கேற்ப
கடுகு - ஒரு தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - கைப்பிடி அளவு
கறிவேப்பிலை - 3 கொத்து
நாட்டுக் கோழி மசாலா தயாரிக்க:
காய்ந்த மிளகாய் - கால் கிலோ
சோம்பு - 50 கிராம்
பட்டை - 10 கிராம்
தேவையான அனைத்துப் பொருட்களையும் தயாராக எடுத்துக் கொள்ளவும். நாட்டுக் கோழியில் எலும்பை நீக்கிவிட்டு, கொட்டைப் பாக்கு அளவிற்கு மிகச் சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம் மற்றும் தக்காளியைப் பொடியாக நறுக்கி வைக்கவும். நாட்டுக் கோழி மசாலா தயாரிக்கக் கொடுத்துள்ளவற்றைப் பொடி செய்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
வெங்காயம் பாதி வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி குழைய வதங்கியதும் சிறு துண்டுகளாக நறுக்கிய நாட்டுக் கோழியைச் சேர்த்து, மல்லித் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்துக் கிளறவும்.
அதனுடன் கால் கப் தண்ணீர் ஊற்றி, உப்புச் சேர்த்து சிறு தீயில் வைத்து மூடிபோட்டு வேகவிடவும். கோழி முக்கால் பதம் வெந்ததும் நாட்டுக் கோழி மசாலாவைச் சேர்த்துக் கிளறவும்.
தேங்காய்ப் பூவை மிக்ஸியில் ஒரு சுற்று அரைத்தெடுத்து கோழியுடன் சேர்த்து நன்கு ஒன்றாகச் சேரும்படி கிளறவும்.
பிறகு அரிசி பொரிமா தூவி கிளறிவிடவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைப் பொன்னிறமாக தாளித்து, கோழியுடன் சேர்த்து கலந்துவிடவும்.
சுவையான நாட்டுக் கோழி கூட்டு தயார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum