Top posting users this month
No user |
Similar topics
முள்ளங்கி கீரை கூட்டு
Page 1 of 1
முள்ளங்கி கீரை கூட்டு
முள்ளங்கி கீரை - ஒரு கட்டு
பாசிப்பருப்பு - அரை கப்
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
அரைக்க:
தேங்காய் - ஒரு சில்லு
சின்ன வெங்காயம் - 5
சீரகம் - ஒரு மேசைக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 4
எண்ணெய்,கடுகு, உளுந்தம் பருப்பு - தாளிக்க
தேவையானவற்றைத் தயாராக எடுத்து வைக்கவும்.
குக்கரில் பாசிப்பருப்புடன் மஞ்சள் தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
அரைக்கக் கொடுத்தவற்றை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி, தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி குழைவாக வதங்கியதும், பொடியாக நறுக்கிய முள்ளங்கி கீரையைச் சேர்த்து மூடி போட்டு வேகவிடவும்.
கீரை முக்கால் பதமாக வெந்ததும் தேங்காய் விழுதைச் சேர்த்து 5 நிமிடங்கள் கிளறவும்.
பிறகு வேக வைத்த பாசிப்பருப்பைச் சேர்த்து, மேலும் 5 நிமிடங்கள் அடுப்பில் வைத்திருந்து இறக்கவும்.
சுவையான முள்ளங்கி கீரை கூட்டு தயார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum