Top posting users this month
No user |
Similar topics
கறி சுக்கா
Page 1 of 1
கறி சுக்கா
கறி- கால்கிலோ
எழுமிச்சைபழம் - 1
நெய் - 3 மேசைக்கரண்டி
பூண்டு- 2 பல்
ஏலம் - 3
கொத்தமல்லிவிதை - 2 தேக்கரண்டி
சோம்பு - 2 தேக்கரண்டி
மிளகு- 2 தேக்கரண்டி
கசகசா - அரை தேக்கரண்டி
தக்காளி - 2
சின்ன வெங்காயம் - 25 கிராம்
தேங்காய் (அரைத்தது) - 3 மேசைகரண்டி
தயிர் - 50 கிராம்
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
கிராம்பு - 2
பட்டை - 2 துண்டு
வத்தல்- 4
சீரகம் - அரை தேக்கரண்டி
பச்சைமிளகாய் - 2
மஞ்சள் - அரைதேக்கரண்டி
கருவேப்பிலை- சிறிது
முதலில் கொததமல்லி,வற்றல்,மிளகு,சீரகம்,சோம்பு,ஏலம்,பட்டை ஆகியவற்றை பொன்னிறமாக வறுத்து அரைத்துக்கொள்ளவும்.பின் அதை சலித்துக்கொள்ளவும்.பின் சல்லடை மேல் தங்கும் மசாலாவை மீண்டும் வறுத்து அரைத்து சலிக்கவும்.மணம் வெளியே போகாதவாறு ஒரு காகிதத்தில் மடித்துவைத்துக்கொள்ளவும்.
பின் இஞ்சி,பூண்டை தனித்தனியாக அரைத்துக்கொள்ளவும்.கசகசாவை தனியாக மஞ்சள்தூள் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
வெங்காயம்,தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்
ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி சூடானதும் சிறிது வெங்காயம் போட்டு பொறிந்ததும் இஞ்சி,பூண்டு,ஏலம் 1,கிராம்பு,பட்டை 1 துண்டு போட்டு பொறிந்ததும் கறியை போட்டு நன்கு கிளறிவிடவும்
தேங்காய்ப்பாலில்முதல் பாலை தனியாக எடுத்து தண்ணீர்பாலில் கசகசா ,உப்பு போட்டு கரைத்து ஊற்றி பின் தக்காளி,பச்சைமிளகாய், தயிர், மீது உள்ள வெங்காயம் அனைத்தையும் போட்டு மூடி போட்டு மூடி வேகவிடவும்.கறி நன்றாக வெந்ததும் சலித்துவைத்த மசாலவை போட்டு ஒரு கொதி கொதிக்கவிட்டு கட்டி தேங்காய்ப்பாலை ஊற்றி அனலில் போட்டு இறக்கி எழுமிச்சை சாறு ஊற்றவும்
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum