Top posting users this month
No user |
Similar topics
மஹாதேவ காளாஸ்டமி திருவையாறு ஆட்கொண்டாருக்கு சிறப்பு அபிஷேகம்
Page 1 of 1

திருவையாறில் தருமை ஆதீனத்திற்கு சொந்தமான ஐயாறப்பர் கோவிலின் நுழைவுவாயிலில் அமைந்துள்ள ஸ்ரீஆட்கொண்டார் சுவாமிக்கு மஹாதேவ காளாஸ்டமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும், ஆராதனைகளும் நடைபெற்றது.
ஒவ்வொரு தமிழ்மாதமும் வரும் அஷ்டமி திதிகளில் கார்த்திகை மாதம் அமரபட்சத்தில் வரும் அஷ்டமி திதி மஹாதேவ காளாஸ்டமி என்று சிறப்பித்து கூறப்படுகிறது.
மஹாதேவ காளாஸ் டமியை முன்னிட்டு ஸ்ரீகாளசம்ஹாரமூர்த்தி எமன் வாகனத்திலும், ஸ்ரீஆட்கொண்டார் சுவாமி ரிஷபவாகனத்திலும் கோவிலில் இருந்து புறப்பட்டு காவிரி ஆற்றில் தீர்த்தம் கொடுத்து ஆற்றின் அருகில் அமைந்துள்ள புஷ்ய மண்டபத்தில் தங்கினார்கள். அதனை தொடர்ந்து மாலையில் கோவிலில் உள்ள ஸ்ரீ ஆட்கொண்டாருக்கு மஹா அபிஷேகம் நடைபெற்று வடைமாலைகளால் அலங்கரிக்கப்பட்டு தீபாரதனை செய்யப்பட்டது.
சுவாமியை அலங்கரிக்கும் வடைமாலையில் கோர்க்கப்படும் வடைகள் தோல்நீக்கிய உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை மற்றும் மிளகு ஆகிய மூன்று வகை பொருட்களை கொண்டு சிறிதளவு கூட தண்ணீர்கலக்காமல் அரைக்கப்பட்டு கிடைக்கும் மாவை சிறு சிறு வில்லைகளாக தட்டி எண்ணையிலிட்டு சுடப்பட்டு தயாரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. நிவேதனமாக வழங்கப்படும் இந்த வடையில் ஏராளமான மருத்துவ குணங்கள் இருப்பதால் பக்தர்கள் விரும்பிபெற்று உண்பது சிறப்புடையது.
இரவு 8 மணியளவில் காவிரிபடித்துறையிலிருந்த சுவாமிகளுக்கு தீபாரதனை நடைபெற்றது. பின்னர் ஆட்கொண்டார் கோவில் வாசலில் காளசம்ஹாரமூர்த்தியும், ஆட்கொண்டார் சுவாமிகளும் எதிரே எதிரே நின்று பட்டு சார்த்தப்பட்டு தீபாரதனை செய்யப்பட்டு காளசம்ஹாரமூர்த்தியும், ஆட்கொண்டார் சுவாமிகளும் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர்.
அதனை தொடர்ந்து 16 கண், 5 கண், 8 கண், 2 கண், மற்றும் 1 கண் உள்ள பலவகையான தீவெட்டி வெளிச்சத்தில் சுவாமிகள் திருவீதிஉலா வந்து கோவிலை அடைந்தார்கள். பின்னர் அர்த்தஜாம பூஜை நடைபெற்று சுவாமி திருகோவிலுக்குள் எழுந் தருளினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டார்கள். இதற்கான ஏற்பாடுகளை கட்டளை விசாரணை குமாரசுவாமி தம்பிரான் சுவாமிகளின் ஆலோசனைபடி ஐயாறப்பர் தேவஸ்தான நிர்வாகிகள் செய்திருந்தனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum