Top posting users this month
No user |
பாழுங்குழியில் சிக்கித்தவிக்கும் மகிந்த: பொன்சேகா
Page 1 of 1

மகிந்த இன்று பாழுங்குழியில் விழுந்து தவித்துக்கொண்டுள்ளதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் இடம்பெற்ற ஜனநாயக கட்சி கூட்டமொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த கால ஊழல் மோசடி நிறைந்த பாவப்பட்ட ஆட்சியில் கையடிக்க நாங்கள் விரும்பவில்லை.
தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மகிந்த ராஜபக்சவை பார்க்கிலும் 1000 மடங்கு நல்லவர் என்று எங்களுக்கு தெரியும்.
நான் வெலிக்கடை முன் நின்று மகிந்தவை பார்த்து கூறினேன் 2015ம் ஆண்டு உங்களை வீட்டிற்கு அனுப்புவேன் என்று அன்று கூறியதை போன்றே இன்று அவரை மண்டியிட வைத்துள்ளேன்.
மகிந்த இன்று பாழுங்குழியில் விழுந்து தவித்துக்கொண்டுள்ளார் இன்று மெதமுல்லையில் பக்கத்து தோட்டகாரர்கள் மாத்திரமே அவருக்கு உள்ளார்கள்.
சுய மரியாதையுடன் எவ்வாறு வாழ்வதென்று இன்று மகிந்தவிற்கு கற்பித்துள்ளோம்.
காதை பிடித்து சுற்றி சுற்றி வீசிவிட்டு மீண்டும் மெதமுல்லையிலேயே தங்க வைத்து விட்டோம்.
எனினும் மீண்டும் ஊர்ந்து ஊர்ந்து பாராளுமன்றத்திற்குள் நுழையவே முயற்சிக்கின்றார்.
மகிந்தவிற்கு கொஞ்சமேனும் வெட்கம் கிடையாது, சுயமரியாதை ஒரு மஞ்சடி அளவேனும் இல்லை.
அப்படி இருந்திருந்தால் ஜனாதிபதி தேர்தலின் போது வாய் கிழிய பேசினார் ஆனால் இன்று வெட்கமே இன்றி தன்னை பிரதமர் வேட்பாளராக நியமிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் காலடிக்கு செல்கின்றார்.
முதுகில் ஒரு எலும்பேனும் இருந்திருந்தால் அப்படி சென்றிருக்க மாட்டார்.
மகிந்த இன்று அடுப்பிற்கு போடும் விறகு அளவேனும் மதிக்கத்தக்கவர் அல்ல.
ஜனாதிபதி தேர்தல் நிறைவடைந்து 12 நாட்களில் இரவு 08 மணியளவில் விசாரணை மேற்கொள்வதற்காக என்னை இழுத்து சென்றார்கள், எனது மனைவியை இரவு 12 மணிக்கு அழைத்து சென்றார்கள்.
அந்த நேரத்தில் நான் எங்கே இருந்தேன் என்று எனது மனைவிக்கு தெரியாது அப்படி எல்லாம் கொடுமை படுத்தினார்கள்.
ஆனால் இன்று மகிந்த மிகவும் அப்பாவியாக எதுவுமே தெரியாதவர் போன்று குற்றப்புலனாய்வு பிரிவிற்கு விசாரணை மேற்கொள்ள அழைத்தாலும் அழுது சாகின்றார்.
ஏன் எனக்கு இப்படி செய்கின்றீர்கள் எதற்கு இப்படி பழிவாங்குகின்றீர்கள், தோல்வியுற்ற என்னை பழிவாங்க நினைக்கின்றீர்கள் என்று மகிந்த கேட்கின்றார்.
ஏன் என்றால் மகிந்த தோல்வியுற்றவர்களை விட்டு வெற்றி பெற்றவர்களையே பழிவாங்குவார் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum